பாடநூல் பக்கங்கள்: 137 – 150 | உப தலைப்புகள்: 10.1 போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல் · 10.2 போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது இலங்கையின் அரசியல் நிலைமை · 10.3 இலங்கையும் ஒல்லாந்தரும்
10.0 அறிமுகம்
- கி.பி. 2 ஆம் ஆயிரம் ஆண்டின் முற்பகுதி முதல் தெற்கு ஐரோப்பா மையமாகக் கொண்ட புதிய வர்த்தக எழுச்சியின் விளைவாக ஐரோப்பியர் கிழக்கு நாடுகளின் செல்வங்களை வர்த்தகம் மூலம் பெறவிரும்பினர்.
- இந்து சமுத்திர வர்த்தகத்தில் நீண்ட வரலாறுடைய இலங்கை ஐரோப்பிய இனத்தவருடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. வர்த்தக நோக்குக்கு மேலாக அரசியல் நோக்கம் இருந்ததால் இலங்கைக்கும் மேற்குலகுக்கும் இடையே பல எதிர் விளைவுகள்; வெளிநாட்டவரின் ஆதிக்கமும் அதற்கு எதிரான சுதேசிகளின் செயற்பாடுகளும்.
10.1 போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருதல்
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான மூன்று வர்த்தகப் பாதைகள்
- கொன்ஸ்தாந்திநோபிள் → பாரசீகம் → மத்திய ஆசியா → சீனா (பட்டுப்பாதை).
- கொன்ஸ்தாந்திநோபிள் → மத்தியதரைக் கடல் → எகிப்து → செங்கடல் → இந்து சமுத்திரம்.
- கொன்ஸ்தாந்திநோபிள் → பக்தாத் → பாரசீகக் குடா → இந்தியாவின் மேற்குக் கரை.
- மூன்று பாதைகளும் கொன்ஸ்தாந்திநோபிளுடன் தொடர்புடையன. தரை வழி = மிருகங்கள்; கடல் வழி = கப்பல்கள்; முஸ்லிம்கள் வாசனைப் பொருட்களைச் சேகரித்து ஐரோப்பாவுக்கு விற்று இலாபம் பெற்றனர்.
- 1453 – துருக்கியர் (இஸ்லாம்) கொன்ஸ்தாந்திநோபிளை (இன்றைய இஸ்தான்புல்) கைப்பற்றினர்; ஐரோப்பியருக்குப் பெரும் இழப்பு; முஸ்லிம்கள் வாசனைப் பொருட்களின் விலையை உயர்த்தினர்; தட்டுப்பாடு → ஐரோப்பியர் புதிய வழி கண்டுபிடிக்க வேண்டிய தேவை → போர்த்துக்கேயர் முதலிடம்.
போர்த்துக்கல் ஏன் முன்னணியில்?
- ஐபீரியன் தீபகற்பம் (தென்மேற்கு ஐரோப்பா); அத்திலாந்திக் சமுத்திரத்தை நோக்கியமைந்தது → கடல் செயற்பாடுகளில் நிபுணத்துவம்.
- 15 ஆம் நூ. – இளவரசன் நான்காம் ஹென்றி (கடலோடி ஹென்றி) பயணத்தில் ஆர்வம்; கப்பல் கட்டும் தொழிற்சாலை; தேசப்படம், நட்சத்திரம் தொடர்பான பாடங்கள்.
- வாஸ்கொடகாமா – ஆபிரிக்காவைச் சுற்றி 1498 இல் இந்தியாவின் கள்ளிக்கோட்டை; ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடங்கியது.
- போர்த்துக்கேய நோக்கம்: பொருளாதார இலாபம், கத்தோலிக்க சமயத்தைப் பரப்புதல்; வர்த்தக ஏகபோக உரிமை (முஸ்லிம் கையிலிருந்ததை தாமாக்குதல்); "நாங்கள் கிறிஸ்தவர்களையும் வாசனைப் பொருட்களையும் தேடி வந்துள்ளோம்" – வாஸ்கொடகாமா.
- கள்ளிக்கோட்டை சாமொரின் ஆட்சியாளரிடம் வர்த்தகக் களஞ்சியம் அமைக்கவும் ஐந்து குருமார் சமயம் போதிக்கவும் அனுமதி; இரண்டாவது கடற்படை போர்த்துக்கேயருக்கு அரிவாள் உரிமை.
- 16 ஆம் நூ. ஆரம்பம் முதல் 450 ஆண்டுகள் ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம்; ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் வருகை.
உரு 10.1 – கொழும்பு பழைய கட்டடத்தில் ஒல்லாந்தரின் இலச்சினை
உரு 10.1 – கொழும்பிலுள்ள பழைய கட்டடமொன்றில் செதுக்கப்பட்டுள்ள ஒல்லாந்தரின் இலச்சினை.
10.2 போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது இலங்கையின் அரசியல் நிலைமை
- இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்தது; வர்த்தக, யுத்த நடவடிக்கைகளில் முக்கிய இடம்.
- போர்த்துக்கேயர் "செய்லோன்" எனக் குறித்த இலங்கையில் உயர்தர கறுவா உற்பத்தி; அதனால் கவனம். 1505 மார்ச் – போர்த்துக்கேய மன்னனால் கிழக்கு நாடுகளின் இராசப் பிரதிநிதியாக பிரான்ஸிஸ்கோ டி அல்மேடா நியமிக்கப்பட்டான்; அவன் மகன் லோரேன்சோ டி அல்மேடா பயணித்த கப்பல் புயல் காற்றினால் எதிர்பாராமல் இலங்கையை அடைந்தது (1505).
- இலங்கையில் ஒற்றுமையின்மையால் வெளிநாட்டவர் ஆதிக்கம் நிலைநாட்டலாயினர்.
- ஆறாம் பராக்கிரமபாகு (1412–1467) நாட்டை ஒன்றிணைத்த நிலை அவனது மரணத்தின் பின் மாறியது. எனவே போர்த்துக்கேயர் வருகையில் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என மூன்று இராச்சியங்கள்.
- "பறங்கியர் கோட்டைக்குப் போனது போல" (கொழும்புக்கும் கோட்டைக்குமிடையிலான நீண்ட தூரத்தைக் காட்டும்) என்ற வழக்கு.
கோட்டை இராச்சியம்
- 1521 – விஜயபாகு கொலை (விஜயபாகு கொள்ளை): கோட்டை மன்னன் 7 ஆம் விஜயபாகு (எட்டாம் வீரபராக்கிரமபாகுவின் பின் ஆறாம் விஜயபாகு – பாடநூல்) மூன்று புதல்வர்களான புவனேகபாகு, மாயாதுன்னை, றைகம் பண்டார ஆகியோரால் கொலை செய்யப்பட்டான்; தேவராஜ எனும் இன்னொரு இளவரசனுக்கு உரிமை வழங்க முயன்றமை காரணம். மூவரும் அரசுரிமை கிடைக்காது போவதை அறிந்தனர்; கண்டி மன்னனாக இருந்த ஜயவீர பண்டாரனின் உதவியைப் பெற்று… சலமான் என்பவனால் விஜயபாகு கொலை செய்யப்பட்டான்.
- கோட்டை இராச்சியம் மூன்று பிரிவுகளாகப் பிளவு: கோட்டை – 7 ஆம் புவனேகபாகு; சீதாவாக்கை – மாயாதுன்னை; றைகம – றைகம பண்டார. இது போர்த்துக்கேயருக்குச் சிறந்த வாய்ப்பு.
கோட்டை – போர்த்துக்கேய உறவு
- புவனேகபாகு தன் பாதுகாப்புக்காக போர்த்துக்கேயரை அழைத்தான் (சீதாவாக்கை மாயாதுன்னையிடமிருந்து இன்னல்களைத் தவிர்க்க).
- முஸ்லிம் வர்த்தகர்களுடன் போர்த்துக்கேயர் போட்டி; கரையோரத்தில் கோட்டைகள் அமைப்பதை முஸ்லிம்கள் விரும்பவில்லை; புவனேகபாகு முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தூண்டப்பட்டான்; முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவின் கள்ளிக்கோட்டை சமோரின் போர்த்துக்கேயரைத் தாக்கச் சீதாவாக்கை மாயாதுன்னைக்கு கடற்படை உதவி வழங்கினான்; ஆயினும் மாயாதுன்னை வெற்றி பெறவில்லை.
- புவனேகபாகு உயிருடன் இருந்தபோது போர்த்துக்கேயருக்கு சிலைகள்; தர்மபாலன் (பேரன்) உருவச் சிலையை போர்த்துக்கல் அனுப்பி முடிசூட்டுவித்தமை → தர்மபாலனுக்குப் போர்த்துக்கேயரின் பாதுகாப்பு.
- 1550/1551 டிசம்பர் 29 – புவனேகபாகு சுடப்பட்டு மரணம் (குதோ எனும் போர்த்துக்கேய எழுத்தாளர்: "அரசன் கொல்லப்பட்டான்").
- தர்மபாலன் (1551 – 1597): போர்த்துக்கேயரின் கைப்பொம்மை; கத்தோலிக்க சமயம் தழுவல் (டொன் ஜுவான் தர்மபால); மக்கள் ஆதரவு இழப்பு; 1565 கொழும்புக்குக் குடிபெயர்ந்தான்; மரணசாசனம் – கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயருக்குச் சொந்தம் (தர்மபாலன் 1597 மரணம்; 1580 எழுதியது); சட்டரீதியாக போர்த்துக்கேயருக்குச் சொந்தமானது.
விதிய பண்டாரன்
- புவனேகபாகுவின் மகள் சமுத்திரதேவியை மணந்த விதிய பண்டாரன் சிறந்த வீரன். மகன் தர்மபாலன் ஆட்சியின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் அரச மாளிகையைச் சூறையாடியமை; பொதுமக்களுக்கு இன்னல்கள் → விதிய பண்டாரன் போர்த்துக்கேயருக்கு எதிராகக் கிளர்ந்தான்; கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டைச் சிறையில்; அவன் மனைவி இரகசியமாக சுரங்கப்பாதை அமைத்து விடுவித்தாள்; பஸ்துன் கோறளை (பலமான பிரதேசம்) தப்பியோடி கோட்டை அமைத்துப் போர்த்துக்கேயருக்கெதிராகப் போர்; கோட்டை மக்கள் உதவி; சீதாவாக்கைக்குச் சிக்கலாக; மாயாதுன்னையும் போர்த்துக்கேயரும் இணைந்து தோற்கடித்தனர்; யாழ்ப்பாணத்தில் மோதலில் உயிரிழந்தான்.
சீதாவாக்கை இராச்சியம்
- மாயாதுன்னை – ஆரம்பம் முதலே போர்த்துக்கேயருக்கு எதிரான கொள்கை; கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயர் ஆதிக்கம் வலுக்க, கோட்டை மன்னர்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் எதிராகப் போரிட்டான். 1555 அளவில் மகன் டிக்கிரி (தீகிரி) பண்டார (பின் I இராஜசிங்கன்) படைத் தலைமை; 1557 மாயாதுன்னை கோட்டையைத் தாக்கினான்; போர்த்துக்கேயர் பீரங்கித் தாக்குதல்.
- 1562 முல்லேரியா போர்: சீதாவாக்கைப் படைக்கும் போர்த்துக்கேயப் படைக்கும் இடையே; ஒருநாள் முழுவதும்; போர்த்துக்கேயர் தோல்வி; 1600 போர்த்துக்கேயர் மடிந்தனர் (ஆசியாவில் போர்த்துக்கேயருக்கு மிக மோசமான தோல்வி).
- 1565 – தர்மபாலன் கோட்டையைவிட்டுக் கொழும்புக் கோட்டையில் குடியேறினான்.
- 1581 – மாயாதுன்னை மறைவுக்குப் பின் டிகிரி பண்டார I ஆம் இராஜசிங்கன் என்ற பெயரில் அரசன்; கண்டி இராச்சியத்தை (கரலியத்த பண்டாரனைத் துரத்தி) இணைத்தான்; 1582 – கொழும்புக் கோட்டையைச் சுற்றிய பிரதேசங்களுக்கு மட்டும் போர்த்துக்கேய அதிகாரம் வரையறுக்கப்பட்டது; கோட்டை இராச்சியம், றைகம, கண்டி சீதாவாக்கையின் கீழ்.
- 1587 கொழும்புக் கோட்டை முற்றுகை – கடற்படை இன்மையால் தோல்வி (வாவி நீரைக் கால்வாய் மூலம் கடலுக்குத் திருப்பியும் தோல்வி).
- வீழ்ச்சிக்கான காரணங்கள்: I ஆம் இராஜசிங்கன் பௌத்த எதிர்ப்புக் கொள்கை; வீர சுந்தர பண்டாரனை (உதவியவர்) கொன்றமை; கண்டி மக்கள் ஆதரவு இழப்பு; கண்டிப் போரில் தோல்வி (பெத்தங்கொடையில் மூங்கில் சிராய் குத்தி காயம் → மரணம் 1593); கோணப்பு பண்டாரனின் எழுச்சி; இராஜசிங்கனின் பின் உரிமையாளர் இன்மை.
- சீதாவாக்கை வீழ்ந்ததும் போர்த்துக்கேயர் கோட்டை, றைகம பிரதேசங்களையும் சீதாவாக்கையின் கீழிருந்த சிலவற்றையும் ஆட்சிக்குட்படுத்தி கரையோரப் பிரதேசத்தின் பெரும் பகுதியில் ஆட்சி.
உரு 10.2 – கண்டி இராச்சியத் தலைவர்கள் கொழும்பில் ஒல்லாந்தரைச் சந்தித்தல்
உரு 10.2 – கண்டி இராச்சியத் தலைவர்கள் கொழும்பில் ஒல்லாந்த ஆட்சியாளர்களைச் சந்தித்தல்.
யாழ்ப்பாண இராச்சியம்
- ஆரியச் சக்கரவர்த்திகள் ஆண்டனர். போர்த்துக்கேயர் வருகையின் போது பரராசசேகரன். கறுவா, மிளகு இல்லாததால் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் கவனம் செலுத்தவில்லை.
- 1519 – 1561: சங்கிலி ஆட்சி; போர்த்துக்கேய வர்த்தகக் கப்பல்களுக்குத் தடை; கத்தோலிக்கப் பரப்புதலுக்கு எதிர்ப்பு; 1543 போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர்; சங்கிலி கப்பம் செலுத்த உடன்பட்டதால் மோதல் தவிர்ப்பு.
- கத்தோலிக்கக் குருமார் மன்னாரில் மதம் பரப்பினர்; சங்கிலி மன்னாரில் தடை விதித்தான்; 1544 மன்னாரில் கத்தோலிக்கரை (பலரைக்) கொன்றான் (பாடநூல்: தடை, தண்டனை); போர்த்துக்கேயருக்கு எதிராக 1548 சீதாவாக்கை மாயாதுன்னையுடன் கூட்டு; விதிய பண்டாரனை யாழ்ப்பாணத்தில் வரவேற்றான்.
- 1560 – போர்த்துக்கேயர் மீண்டும் தாக்கினர்; சங்கிலி தப்பிச் சென்றான்; மன்னாரில் காவல் அரண்; மன்னாரை இழந்தமை சங்கிலிக்குப் பெரும் நட்டம் (முத்துக் குளித்தல் வருமானம்).
- 1561 – புவிராஜ பண்டாரம் சங்கிலியை ஆட்சியிலிருந்து நீக்கினான்; போர்த்துக்கேய உதவி நாடல்.
- 1591 – போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து எதிர்மன்னசிங்கனை ஆட்சியாளனாக்கினர்; 1617 மரணம்; 1619 – பிலிப் த ஒலிவேரா தலைமையில் படை; 1621 யாழ்ப்பாண இராச்சியம் முற்றாகக் கைப்பற்றப்பட்டது.
- வீழ்ச்சிக் காரணங்கள்: அரச உரிமை மோதல்கள்; நிரந்தரமான படைபலம் இன்மை; கண்டியைப் போல இயற்கை அரண் இன்மை.
கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயரின் அதிகார முயற்சிகள்
1594 – தந்துறைப் போர்:
- போர்த்துக்கேயருக்குக் கீழ் இருந்த கோணப்பு பண்டாரன் (விமலதர்மசூரிய) போர்த்துக்கேயருக்கு விருப்பமில்லை. **கரலியத்த பண்டாரனின் மகள் குசுமாசன தேவி (டோனா கத்தரீனா)**வை அரசியாக்கிப் போர்த்துக்கேயர் ஆள விரும்பினர்; 1594 – பேரோ லோபெஸ் த சூசா (கப்டன் ஜெனரல்) தலைமையில் ஆக்கிரமிப்பு; அவன் பின்வாங்க வேண்டிய நிலை; அக்டோபர் 1594 தந்துறையில் போர்த்துக்கேயப் படை படுதோல்வி; பேரோ லோபெஸ் கொல்லப்பட்டான்; குசுமாசன தேவி கண்டி மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டு விமலதர்மசூரியனை மணந்தாள்; புதிய அரச வம்சம்.
- விமலதர்மசூரியனின் போர்த் தந்திரங்கள்; மக்கள் ஆதரவு; போர்த்துக்கேயருக்கு உதவிய சுதேசப் படை கண்டியுடன் இணைந்தமை.
பலனைப் போர்: தொன் ஜெரோனி மோ த அசவேது கப்டன் ஜெனரல்; கரையோரப் பிரதேசத்தில் எதிர்த்து கிளர்ச்சி; அசவேது கண்டியுடன் போரிடத் தயாராகி 1602 இல் கோவாவிலிருந்து மேலதிகப் படை வரவழைத்து ஆயிரக்கணக்கான வீரர்களுடன் கண்டியை ஆக்கிரமித்தான்; கொழும்புக்குத் திரும்பும் வழியில் கண்டிப் படை அவர்களைச் சூழ்ந்து தாக்கி வெற்றி (மல்வானை – கொழும்பு); அசவேது பாரிய படையுடன் தப்பிச் சென்றான்; அதன் பின்னர் போர்த்துக்கேயர் ஆக்கிரமிப்பதற்குப் பதிலாக கிராமங்களைத் தாக்கி நட்டம். 1617 – செனரத் போர்த்துக்கேயருடன் சமாதான உடன்படிக்கை.
1630 – ரந்தெனிவெலப் போர்:
- போர்த்துக்கேய கப்டன் ஜெனரல் கொன்ஸ்தாந்தினு த சா ஊவா வழியாகக் கண்டியை ஆக்கிரமித்தான்; ஜூலை 1630 – 600 போர்த்துக்கேய வீரர்கள் + 4500 சுதேசப் படைவீரர்; பதுளையைக் கைப்பற்றி அழித்தான்; செனரத் படையுடன் பதுளையை அடைந்து தாக்குதல்; ஆஸ்தான இளவரசன் (பின் II ஆம் இராஜசிங்கன்) கண்டிப் படைத் தலைமை; கண்டிப் படை சூழ்ந்தபோது கரையோர முதலிமார் கண்டி மன்னனுடன் சேர்ந்தனர்; வெள்ளவாய அருகில் ரந்தெனிவெலுக்குப் பின்வாங்கல்; 350 பேர் மட்டுமே உயிர் தப்பினர்; கப்டன் ஜெனரல் கொன்ஸ்தாந்தினு த சா கொல்லப்பட்டான்.
- இத்தாக்குதல் திடீரென எடுக்கப்பட்டதல்ல; இரண்டு ஆண்டுகளாகத் திட்டமிடப்பட்டது. தோல்வி: கண்டியின் தந்திரச் செயற்பாடுகளால்.
1638 – கன்னொறுவப் போர்:
- 1638 மார்ச் – கப்டன் ஜெனரல் தியோகோ த மெல்லோ மீண்டும் கண்டியைத் தாக்கினான்; ஆயிரக்கணக்கான போர்த்துக்கேய வீரர்கள் + சுதேசப் படை; கன்னொறுவ (கண்டி) நகரில் சிரமமின்றி நுழைந்தனர் (அங்கு II ஆம் இராஜசிங்கன் தந்திரமாக இவ்வேளையில் நகரிலிருந்து வெளியேறியிருந்தான்); மன்னன் தலைமையிலான கண்டிப் படை சூழ்ந்து வளைத்தது; கடுஞ்சமர்; தியோகோ த மெல்லோவும் உயிரிழந்தான்; போர்த்துக்கேயரது இறுதிப் படையெடுப்பு.
- கண்டியின் வெற்றிக்கான காரணங்கள்: (1) கண்டி மக்கள் மன்னனுக்கு ஆதரவு; (2) போர்த்துக்கேயருக்காகப் போராடச் சென்ற கரையோர சுதேசப் போர் வீரர்கள் கண்டி இராச்சியத்தை அண்மித்ததும் கண்டி அரசனுடன் இணைந்தமை; (3) கண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்களின் உபாயங்களும்; (4) கண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு (மலைப் பிரதேசம்).
10.3 இலங்கையும் ஒல்லாந்தரும்
- ஒல்லாந்தரின் தாய்நாடு ஒல்லாந்து; போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்து ஒரு நூற்றாண்டில் ஒல்லாந்தர் வரத்தொடங்கினர்.
- 1602 – ஒல்லாந்து வர்த்தகச் சங்கங்கள் இணைந்து ஒல்லாந்தக் கிழக்கிந்திய வர்த்தகச் சங்கம் (VOC) நிறுவப்பட்டது. VOC முன்னிலையில் வர்த்தகச் செயற்பாடுகள்; இலாபம் பெறுதலே பிரதான நோக்கம்.
- ஜாவா (பத்தேவியா) தலைமையகம்; கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பொருட்களுக்காக இலங்கை மீது கவனம்.
- 1602 – ஜோரிஸ்வான் ஸ்பில்பேர்ஜன் (தூதுவன்) இலங்கை வந்து முதலாம் விமலதர்மசூரியனை சந்தித்தான்; அடுத்து சிபல் த வாட் (Sebald de Weert). இந்தத் தூதுப் பயணங்களால் பலனில்லை.
- இரண்டாம் இராஜசிங்கன் – ஒல்லாந்துடன் நட்பு; போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுதல் நோக்கம்; கடற்படை இல்லாததால் ஒல்லாந்தர் துணை. 1638 வெஸ்டர் வோல்ட் எனும் ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியுடன் உடன்பாடு.
1638 கண்டி – ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்
- போர்த்துக்கேயரை வெளியேற்ற கண்டி அரசனுக்கு உதவ ஒல்லாந்தர் இணங்குதல்.
- ஒல்லாந்தருக்கு ஏற்படும் செலவைப் பணம், பொருட்கள் (கறுவா, மிளகு, தேன், மெழுகு) மூலம் செலுத்த அரசன் உடன்படல்.
- யானை தவிர கண்டி இராச்சியத்தின் ஏனைய வர்த்தகப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் ஏகபோக உரிமை ஒல்லாந்தருக்கு.
- போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளில் அரசன் விரும்பினால் ஒல்லாந்தப் படை தங்கியிருக்கலாம்.
- 1638 மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றியது முதல்; 1656 கொழும்பு; 1658 – போர்த்துக்கேயரை முற்றாக வெளியேற்றினர். திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் கோட்டைகள் கண்டிப் படையினராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்டன.
- ஒல்லாந்தர் வசனத்தை மீறி கோட்டைகளை அரசனிடம் ஒப்படைக்கவில்லை; எனவே ஒல்லாந்தர்–II ஆம் இராஜசிங்கன் நல்லெண்ணம் முறிந்தது.
- II ஆம் இராஜசிங்கன் இரண்டு நோக்கங்களுடன் ஒல்லாந்தரை அழைத்தான்: (1) போர்த்துக்கேயரை வெளியேற்றல்; (2) போர்த்துக்கேயரின் கீழிருந்த பிரதேசங்களைக் கண்டியுடன் இணைத்துச் சுதந்திர இலங்கையைத் தோற்றுவித்தல். முதலாவது நிறைவேறியது; இரண்டாவது நிறைவேறவில்லை; 1658 அளவில் ஒல்லாந்தருக்கு போர்த்துக்கேயர் நிலப்பகுதியை விட குறைந்த நிலப்பகுதியே கிடைத்தது.
- 1665 – 1668 ஒல்லாந்தர் கண்டியின் சில பகுதிகளைக் கைப்பற்றினர்; 1670 – 1675 இடையே இராஜசிங்கன் பல தாக்குதல்களால் இழந்த பகுதிகளை மீட்டான். 1670 இன் பின் ஒல்லாந்தர் கண்டியுடன் மோதுவதைத் தவிர்த்தனர்.
- ஒல்லாந்தர் மன்னனை "திரீசிங்களாதீஸ்வர" எனக் குறிப்பிட்டனர்; கடிதங்களில் "எனக்கு பணிபுரியும் நேசமான ஒல்லாந்தர்" என மன்னன்; ஒல்லாந்தர் மன்னனுக்கு "தங்களின் பணிவான சேவகன்".
கண்டிக்குத் தொடர்பான ஒல்லாந்தரின் குறிக்கோள்களில் காணப்பட்ட சிறப்பியல்புகள்
I. ஒல்லாந்த VOC க்கு நட்டம் ஏற்படும் மோதல்களிலிருந்து விலகி சமாதானமாகச் செயற்படல். II. மன்னனின் நல்லெண்ணத்தைப் பெற பரிசுகள். III. கறுவாவை (கண்டி இராச்சியத்தில் விளையும்) பெற்றுக்கொள்வது ஒல்லாந்தர் நோக்கம். IV. உபசம்பதா நிகழ்ச்சிக்குக் கப்பல்கள் வழங்கி உதவினர் (II ஆம் விமலதர்மசூரியன், விஜய இராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்).
உச்ச நிலையிலான வர்த்தக இலாபத்தை மீட்டுவதில் ஒல்லாந்தரின் குறிக்கோள்
I. கண்டி மன்னன் வேறு வெளிநாட்டவருடன் வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்துவதை ஒல்லாந்தர் தடை செய்தனர். II. மன்னனுடன் கருத்து வேறுபாடு – கரையோரப் பிரதேசங்களுக்கு இடையிலான கடவைகளை மூடிவிடல். III. கரையோரப் பிரதேசத்தில் நெற்பயிர்ச் செய்கை முன்னேற்றல் (நெல் இறக்குமதிச் செலவு குறைக்க). IV. கறுவா பயிரிடவும் பாதுகாக்கவும் நடவடிக்கை. V. கரும்பு, கோப்பி, பருத்தி பயிர்ச்செய்கை.
கண்டிக்கும் ஒல்லாந்தருக்குமிடையிலான மோதல்கள்
- 1760 – ஒல்லாந்தரின் ஆட்சியால் துன்புற்ற கரையோர மக்கள் கண்டி மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனை வேண்டினர்; நீர்கொழும்பு, மாத்தறை கலகங்கள். கண்டி கலகொட அதிகாரம் (எனபவன்) கீழ் படை அனுப்பப்பட்டு கட்டுவன, கோட்டை, மாத்தறைக் கோட்டை முதலியன கைப்பற்றப்பட்டன; பின் ஒல்லாந்தர் மீளக் கைப்பற்றினர்.
- 1764 – ஒல்லாந்த ஆளுநர் பெரன் வென் எக் (Baron van Eck) தலைமையில் ஆறு படைப் பிரிவுகளால் கண்டி ஆக்கிரமிக்கப்பட்டது; ஆயினும் எவையும் கண்டியை அடையவில்லை; கண்டி மக்கள் படைகளைத் தோல்வியுறச் செய்தனர்.
- 1765 – மீண்டும் தாக்குதல்; கண்டியினுள் சென்றனர்; கீர்த்தி ஸ்ரீ சமாதானம் விரும்பியதால் ஒல்லாந்தர் சாதகமான நிபந்தனைகளை முன்வைத்தனர்; நிபந்தனைகள் கடுமையானவை என மன்னன் ஏற்க விரும்பவில்லை; ஒல்லாந்தர் நகரை ஒரு மாதம் தங்கியிருந்தனர்; உணவுப் பற்றாக்குறை, நோய், மழை என்பவற்றால் கண்டியைக் கைவிட்டு கொழும்புக்கு மீண்டனர்.
- 1766 – கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் சமாதான உடன்படிக்கை – கண்டி இராச்சியம் கரையோரப் பகுதியை இழந்தது; கண்டியின் வர்த்தகத்துக்குத் தாக்கம்; ஒல்லாந்தரின் கீழிருந்த பகுதிகளின் உரிமை உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது; நிபந்தனைகள் பல சாதகமற்றவை; மக்கள் நடவடிக்கையால் செயலிழக்கச் செய்யப்பட்டது.
தேசப்படம் 10.1 – இலங்கையில் ஒல்லாந்த கோட்டைகள் அமைந்த இடங்கள் — ஊடாடும் தேசப்படத்தில் பயிற்சி செய்யுங்கள். தேசப்படம் 10.1 – இலங்கையில் ஒல்லாந்த கோட்டைகள் அமைந்த இடங்கள் (கருப்புப் புள்ளி = ஒல்லாந்தர் ஆட்சி புரிந்த இடங்கள்; சிவப்பு முக்கோணம் = இராசதானிகள் அமைந்த இடங்கள்). (பருத்தித்துறை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், ஹெமன்ஹெயில், பூநகரி, ஆனையிறவு, முல்லைத்தீவு, மன்னார், அரிப்பு, கற்பிட்டி, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, கோட்டை, களுத்துறை, காலி, மாத்தறை, தங்காலை, மட்டக்களப்பு, திருகோணமலை (பெட்ரிக் கோட்டை), கொட்டியாரம்…)
முக்கிய விடயங்கள் (பாடநூல் சுருக்கம்)
- பொருளாதார ரீதியில் இலாபம் பெறல், மதத்தைப் பரப்புதல் போன்ற குறிக்கோள்களுடன் ஐரோப்பியர் ஆசியாவுக்கு வந்த போதிலும், ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்களுடன் அவர்களது குறிக்கோள்கள் மாற்றமடைந்தன.
- போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும்போது இங்கு அரசியல் ஒற்றுமையற்ற நிலை அவர்கள் தம் ஆட்சியை இங்கு ஏற்படுத்த உதவியது.
- கோட்டை இராச்சிய மன்னனான தர்மபாலன் போர்த்துக்கேயருக்குச் சாதகமாகச் செயற்பட்டதால் அங்கு முதன்முதலில் போர்த்துக்கேயரின் ஆட்சி நிலைபெற்றது.
- 16 ஆம் நூற்றாண்டில் சீதாவாக்கை ஆட்சியாளர் போர்த்துக்கேயருக்கு எதிராகப் போரிட்டனர்.
- கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் ஆட்சியை நிலைநாட்ட முயன்றதால் கண்டிக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையே போர்கள்.
- கண்டி ஆட்சியாளர் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஒல்லாந்தரின் உதவியைப் பெற்றுக்கொண்டனர்.
- கண்டி அரசர்களுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே பல மோதல்கள்.
காலக்கோடு – அலகு 10
| ஆண்டு | நிகழ்வு |
|---|---|
| 1453 | கொன்ஸ்தாந்திநோபிள் வீழ்ச்சி |
| 1498 | வாஸ்கொடகாமா – கள்ளிக்கோட்டை |
| 1505 | லோரேன்சோ டி அல்மேடா இலங்கை வருகை |
| 1521 | விஜயபாகு கொள்ளை – கோட்டை மூன்றாகப் பிளவு |
| 1543 | போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் ஆக்கிரமிப்பு |
| 1551 | தர்மபாலன் – போர்த்துக்கேயக் கைப்பொம்மை |
| 1562 | முல்லேரியா போர் |
| 1565 | தர்மபாலன் கொழும்புக்கு |
| 1581 | டிகிரி பண்டார (I ஆம் இராஜசிங்கன்) |
| 1587 | கொழும்பு முற்றுகை (தோல்வி) |
| 1591 / 1619 / 1621 | யாழ்ப்பாணம் – எதிர்மன்னசிங்கன் / படையெடுப்பு / முழு ஆக்கிரமிப்பு |
| 1594 | தந்துறைப் போர் |
| 1597 | தர்மபாலன் மரணம் |
| 1602 | VOC; ஸ்பில்பேர்ஜன் வருகை; அசவேதுவின் படையெடுப்பு |
| 1630 | ரந்தெனிவெலப் போர் |
| 1638 | கன்னொறுவப் போர்; கண்டி–ஒல்லாந்த உடன்படிக்கை |
| 1658 | போர்த்துக்கேயர் முற்றாக வெளியேற்றம் |
| 1665–68 / 1670–75 | ஒல்லாந்தர் கண்டியைத் தாக்கல் / மீட்பு |
| 1760 / 1764 / 1765 / 1766 | கரையோரக் கலகம் / படையெடுப்பு / மீண்டும் / சமாதான உடன்படிக்கை |
தேர்வு முக்கியத்துவம் – அலகு 10
- போர்த்துக்கேயர் ஆசியா வந்ததன் காரணங்கள்; வருகையின்போது இலங்கையின் அரசியல்.
- தந்துறை, ரந்தெனிவெல, கன்னொறுவப் போர்கள் – விளக்கம், வெற்றிக் காரணங்கள்.
- 1638 உடன்படிக்கையின் நிபந்தனைகள்.
- ஒல்லாந்தரின் குறிக்கோள்கள்; கண்டி–ஒல்லாந்த மோதல்கள்.
- தேசப்படம் 10.1 – ஒல்லாந்தக் கோட்டைகள் குறித்தல்.
பாடநூல் செயற்பாடு: (1) கோட்டை, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களில் நிலவிய உள்நாட்டுப் பூசல்களே போர்த்துக்கேயர் ஆட்சியின் கீழ் வருவதற்கான காரணங்களுள் ஒன்று – ஒரு நாட்டின் ஒற்றுமையின்மை அழிவுக்குக் காரணம் என்பதை விளக்குக. (2) போர்த்துக்கேயர் வந்தபோது இலங்கையின் அரசியல் நிலைமையை விளக்குக.
