பாடநூல் பக்கங்கள்: 117 – 127 | உப தலைப்புகள்: 8.1 ஆரம்பமும் பரவலும் · 8.2 கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு · 8.3 பிராந்திய நிர்வாகம் (ரட்டவசம்) · 8.4 சமூக அமைப்பு
8.0 அறிமுகம்
- கோட்டை, சீதாவாக்கை இராச்சியங்கள் வீழ்ச்சியுற்றதன் பின் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கண்டி இராச்சியத்தையே சார்ந்தது. கி.பி. 1815 வரை கண்டி இலங்கையின் இறுதி இராச்சியமாக விளங்கியது.
8.1 ஆரம்பமும் பரவலும்
- பெயர்கள்: செங்கடகல நகரம், மலைநாட்டு இராச்சியம், கண்டி இராச்சியம்.
- தலைநகர்: கண்டி – இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட இடம்; மகாவலி கங்கை சூழ; பலனை, உன்னஸ்கிரிய போன்ற கஷ்டமான பாதைகளால் நுழைவது சிரமம்; இரம்மியமான காலநிலை, வளமான பூமி.
- ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் கண்டி கோட்டைக்கு அடிமைப்பட்ட பிராந்திய அரசு. கண்டியை அண்டிய பிரதேசங்களை ஒன்றுபடுத்தி முதன் முறையாக அரசொன்றை உருவாக்கியவன் சேனா சம்மத விக்கிரமபாகு (கி.பி. 1469 – 1511) – கண்டி இராச்சியத்தின் முதல் மன்னன்.
உரு 8.1 – பழைய கண்டி நகரின் அமைப்பு
உரு 8.1 – பழைய கண்டி நகரின் அமைப்பைக் காண்பிக்கும் படம். T தலதா மாளிகை; A மங்குல் மடுவ; KP அரச மாளிகை; N நாத தேவாலயம்; P பத்தினி தேவாலயம்; S தூபி; B வெள்ளரசு மரம்; V விஷ்ணு தேவாலயம்; BR மன்னரின் படையினரின் முகாம்; K கதிர்காமத் தேவாலயம்; AV மல்வத்து விகாரை, AV அஸ்கிரிய விகாரை; KV குமாருப்பே வீதி.
கண்டி இராச்சிய மன்னர்கள்
| மன்னன் | காலம் |
|---|---|
| சேனா சம்மத விக்கிரமபாகு | 1469 – 1511 |
| ஜயவீர பண்டாரன் | 1511 – 1551 |
| கரலியத்த பண்டாரன் | 1551 – 1581 |
| I ஆம் இராஜசிங்கன் (சீதாவாக்கை) | 1581 – 1591 |
| I ஆம் விமலதர்ம சூரியன் | 1592 – 1604 |
| செனரத் | 1604 – 1635 |
| II ஆம் இராஜசிங்கன் | 1635 – 1687 |
| II ஆம் விமலதர்ம சூரியன் | 1687 – 1707 |
| ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் | 1707 – 1739 |
| ஸ்ரீ விஜய இராஜசிங்கன் | 1739 – 1747 |
| கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் | 1747 – 1781 |
| இராஜாதி இராஜசிங்கன் | 1781 – 1798 |
| ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் | 1798 – 1815 |
ஆரம்ப மன்னர்கள்
- ஜயவீர பண்டாரன் (1511 – 1551): சேனா சம்மத விக்கிரமபாகுவின் மகன்; சீதாவாக்கை மாயாதுன்னையின் நண்பன் (விஜயபாகு கொள்ளை – கோட்டை நிகழ்வில் மாயாதுன்னைக்கு உதவி).
- கரலியத்த பண்டாரன் (1551 – 1581): போர்த்துக்கேயருடன் உடன்பாடான கொள்கை; கண்டிப் பிரதானிகள் அதிருப்தி; எனவே சீதாவாக்கை மன்னன் I ஆம் இராஜசிங்கனுக்கு ஆதரவு; கண்டிப் பிரதானி வீரசுந்தர பண்டாரன் முதலாம் இராஜசிங்கனுக்குக் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிக்க ஆதரவளித்தான்; எதிர்கொள்ள இயலாத கரலியத்த பண்டாரன் மகள் குசுமாசனதேவி, யமசிங்க பண்டாரவுடன் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்தான்; குசுமாசனதேவி டோனா கத்தரினா, யமசிங்கன் டொன் பிலிப் எனும் பெயரில் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவினர்.
- கி.பி. 1580 அளவில் I ஆம் இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றி சீதாவாக்கை, கண்டி இரண்டையும் ஆட்சி செய்தான்; வீரசுந்தர பண்டாரனை சந்தேகித்துக் கொன்றான்; வீரசுந்தரனின் மகன் கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயரிடம் தஞ்சமடைந்து டொன் ஜுவான் எனும் பெயரில் கிறிஸ்தவனானான்.
- போர்த்துக்கேயரின் பொம்மையாக இருந்த யமசிங்கன் இறந்ததும் (சிறு காலத்தில் மரணம்) – போர்த்துக்கேயர் அவன் மகனை அரசாக்கி ஆட்சி செய்ய முயன்றும் கோணப்பு பண்டாரனால் அம்முயற்சி தோல்வி; மலைநாட்டுக் குடிகளின் ஆதரவைப் பெற்ற கோணப்பு பண்டாரன் போர்த்துக்கேயருக்கு எதிராகப் பதவியைப் பறித்துக் கொண்டு முதலாம் விமலதர்மசூரிய என்ற பெயருடன் மன்னனானான்.
முதலாம் விமலதர்மசூரிய (1592 – 1604)
எதிர்கொண்ட சவால்கள்: (1) சட்டபூர்வ ஆட்சி உரிமை இல்லாமை; (2) போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திலிருந்து பாதுகாக்க; (3) கண்டியை சீதாவாக்கை ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றல்; (4) வீழ்ச்சியுற்ற பௌத்த சமயத்தை மீளவும் எழுச்சியுறச் செய்தல்; (5) கண்டி இராச்சியத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பல்.
சட்டபூர்வத்தன்மையை நிலைநாட்ட:
- அரசுரித்தாளியான குசுமாசன தேவியைத் திருமணம் செய்தமை.
- ரோமன் கத்தோலிக்கச் சமயத்தைக் கைவிட்டுப் பௌத்தம் தழுவியமை.
- "விமலதர்மசூரிய" என்ற பௌத்த நாமத்தைச் சூடியமை.
- சீதாவாக்கையின் தெல்கமுவ விகாரையிலிருந்த புனித தந்தத்தை கண்டியில் பிரதிஷ்டை செய்தமை.
போர்த்துக்கேயரிடமிருந்து மீட்க: (1) கி.பி. 1594 – தந்துரைப் போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தமை; (2) போர்த்துக்கேயருக்கு எதிராகத் தாழ் நாட்டில் கலவரங்களுக்கு உதவல்; (3) ஒல்லாந்தரின் உதவியைப் பெற முயன்றமை.
பௌத்த சமய எழுச்சிக்கு: (1) பர்மாவிலிருந்து உபசம்பதாவைக் கொண்டு வந்தமை; (2) பழைய விகாரைகளைப் புனரமைத்தல் – லங்காதிலக, கடலாதெனிய, ரிதி விகாரை.
பொருளாதாரம்: விவசாயத்தை விருத்தியடையச் செய்தல்; பருத்திப் பயிர்ச்செய்கைக்கு உதவி; கொத்மலை, வலப்பனையில் இரும்புருக்குக் கைத்தொழில்; வெடிமருந்துக்குத் தேவையான உப்பு உற்பத்தி. கி.பி. 1604 கடுமையான காய்ச்சலால் மரணம்.
செனரத் மன்னன் (1604 – 1635)
- விமலதர்மசூரியனின் ஒன்றுவிட்ட சகோதரன் (செனரத்); விமலதர்மனின் குழந்தைகள் இளம் பராயத்தினர் என்பதால் 1604 இல் மன்னன்; குசுமாசன தேவியை மணந்து அரசுரிமையை உறுதிப்படுத்தினான்.
- சவால்கள்: ஆட்சி உரிமையை உறுதிப்படுத்தல்; போர்த்துக்கேய அச்சுறுத்தல்.
- அதிகாரப் போராட்டத்தைத் தவிர்க்க: கண்டி இராச்சியத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து மகன்மாருக்குக் கொடுத்தான்: ஊவா – குமாரசிங்க; மாத்தளை – விஜயபால; கண்டி – இராஜசிங்க.
- மகா ஆஸ்தான குமாரன் (பின் இராஜசிங்கன் II) போர்த்துக்கேயருக்கு எதிரான 1630 – ரந்தெனிவெல (ஊவா) போரில் வெற்றி.
II ஆம் இராஜசிங்க மன்னன் (1635 – 1687)
சவால்கள்: (1) போர்த்துக்கேயத் தாக்குதல்களை அடக்கல்; (2) போர்த்துக்கேயரை வெளியேற்றல்; (3) கண்டிப் பிரபுக்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தல்; (4) ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பிலிருந்து காத்துக்கொள்ளல்.
- 1630 ரந்தெனிவெல; 1638 கன்னொறுவ போர் – போர்த்துக்கேயருக்குத் தோல்வி.
- கடற்படை இல்லாததால் ஒல்லாந்தரின் உதவி; 1638 – 1658 இடையே ஒல்லாந்தர் உதவியுடன் போர்த்துக்கேயரைக் கரையோரத்திலிருந்து முற்றாக வெளியேற்றினர்; ஆனால் ஒல்லாந்தர் கரையோரங்களில் தம் ஆட்சியை நிலைநிறுத்தினர்; 1665 – 1668 இல் ஒல்லாந்தர் கண்டியின் சில பிரதேசங்களைக் கைப்பற்றினர்; 1670 – 1675 இடையே இராஜசிங்கன் மீட்டுக் கொண்டான்.
- கற்பிட்டி, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு துறைமுகங்கள் கண்டி இராச்சியத்துக்கு உரித்தாயின (கண்டியின் கீழ்).
- றொபட் நொக்ஸ் (சிறைப்பிடிக்கப்பட்டவர்) – இராஜசிங்கன் II இன் உருவப்படத்தை வரைந்தவர்.
உரு 8.1 – இரண்டாம் இராஜசிங்க மன்னனின் தோற்றம்
உரு 8.1 – இரண்டாம் இராஜசிங்க மன்னரின் தோற்றத்தைக் காட்டும் சித்திரம். கண்டி இராச்சியக் காலத்தில் இங்கு சிறைப்பட்டிருந்த றொபட் நொக்ஸ் என்ற ஆங்கிலேயரால் வரையப்பட்டது.
இறுதிக் கண்டி மன்னர்கள்
- II ஆம் விமலதர்மசூரிய (1687 – 1707): திறமையற்ற; பிரதானிகள் அதிகாரத்தைப் பலப்படுத்தினர்; ஒல்லாந்தருடன் சமாதானம்; உபசம்பதா தளர்வடைந்ததால் பர்மாவிலிருந்து (அரக்கான்) உபசம்பதா வரவழைத்தான் (ஒல்லாந்த உதவி); தலதா மாளிகை புனர்நிர்மாணம்.
- ஸ்ரீ வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் (1707 – 1739): தென்னிந்திய இளவரசியை மணம் முடித்தான்; குழந்தைப் பேறு இல்லாததால் தென்னிந்தியர்களின் வழக்கப்படி அரசின் சகோதரனுக்கு அரசு உரிமை.
நாயக்க அரச வம்சம் (1739 – 1815)
- ஸ்ரீ விஜய இராஜசிங்கன் (1739 – 1747): மகாராணியின் சகோதரன்; நாயக்க வம்ச ஆட்சி ஆரம்பம்; சவால்: அரச சபைப் பிரதானிகளுக்கிருந்த அதிக அதிகாரம்; நாயக்கர்களுக்குப் பதவிகள் வழங்கினான்; பர்மாவிலிருந்து குருமாரைத் தருவித்து உபசம்பதா நடத்த முயன்றும் வெற்றிபெறவில்லை.
- கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் (1747 – 1781): பௌத்த சமயம் பொலிவற்றுக் காணப்பட்டதால், வெளிவிட்ட ஸ்ரீ சரணங்கர பிக்குவின் ஆலோசனைப்படி பௌத்த சமய மறுமலர்ச்சி:
- சீயம் (தாய்லாந்து) நாட்டுக்குத் தூதுக் குழு அனுப்பி உபாலி தேரர் உள்ளிட்ட பிக்குகளை அழைத்து 1753 இல் உபசம்பதா நடத்தினான் → சியம் நிகாயம் தோற்றம்.
- கண்டி இராச்சியத்திலும் தாழ் நாட்டிலும் விகாரைகளைப் புனரமைத்தல்.
- ஸ்ரீ சரணங்கரவுக்கு "சங்க ராஜா" பதவி வழங்கல்.
- 1760 – 1765 ஒல்லாந்தருடன் நல்லுறவு முறிவு; 1766 சமாதான ஒப்பந்தம்.
- 1781 மரணம் (வாரிசின்றி).
- இராஜாதி இராஜசிங்கன் (1781 – 1798): கீர்த்தி ஸ்ரீயின் சகோதரன்; பிரதானிகளுக்கும் நாயக்கருக்கும் அபிப்பிராய பேதம்; கி.பி. 1796 – ஆங்கிலேயர் கரையோரத்தை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றினர்; வாரிசின்றி 1798 மரணம்.
- ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன் (1798 – 1815): பிலிமத்தலாவை (முதல் பிரதானி) தேவைக்காக கண்ணசாமி எனும் இளவரசன் சிம்மாசனம்; 1803 – ஆங்கிலேயர் கண்டியை ஆக்கிரமித்தபோது மக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகொண்டான்; இறுதிக் காலத்தில் கொடூர ஆட்சி; மன்னனுக்கும் மக்களுக்குமிடையிலான உறவு சீர்கெட்டது. 1815 பெப்ரவரி – ஆங்கிலேயர் படையனுப்பி மன்னனைக் கைது செய்தனர்; 1815 மார்ச் 2 – கண்டிய உடன்படிக்கை (Kandyan Convention) – ஆளுநர் றொபட் பிறௌன்றிக் மற்றும் கண்டிப் பிரதானிகள்; கண்டி இராச்சியம் ஆங்கிலேயருக்கு அடிமை; மன்னன் வேலூருக்கு நாடு கடத்தப்பட்டான்.
உரு 8.2 – கண்டி தலதா மாளிகையின் பெரஹரா
உரு 8.2 – பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டி தலதா மாளிகையின் பெரஹராவையும் (ஊர்வலம்) கண்டி நகரின் வீதிகளின் தோற்றத்தையும் காண்பிக்கும் அபூர்வமான படம்.
8.2 கண்டி இராச்சியத்தின் நிர்வாகக் கட்டமைப்பு
- மன்னனுக்கு அடுத்து இரு பிரதானிகள் (அதிகாரம்) – மன்னனுக்கு அடுத்தபடி; அரச சபை – அரசின் முக்கிய விடயங்களைக் கலந்துரையாட.
- அரசரின் தலைமையில் கூடும் அச்சபைக்கு: பிரதானிகள், திசாவைகள், தலைமைச் செயலாளர், பிரதேச செயலாளர்கள்.
அரசனின் அதிகாரங்கள்
- நாட்டின் உயர் அதிகாரம் இவனுக்கே; அமைதியைப் பேணல், பாதுகாப்பு; சம்பிரதாய பூர்வமான நடைமுறைகளுக்கமைய செயற்படல்; உயர் நீதித்துறை அதிகாரம் (குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கும் அதிகாரம் மன்னனுக்கு மட்டும்); அனைத்து அரசியல், பொருளாதார நிர்வாகப் பணிகளும் அரசனைத் தலைமையாகக் கொண்டு.
பிரதானிகள்
- இரு பதவிகள்: முதலாவது பிரதம பிரதானி = பல்லேகம்பா (பல்லேகம்பஹ) பிரதானி; இரண்டாவது = உடகம்பா (உடகம்பஹ) பிரதானி (அதிகார் என்றும் அழைக்கப்படுவர்).
- மகா அதிகாரம் / இரண்டாவது அதிகாரம் (பிரதேசங்கள்):
| மகா அதிகாரம் (மகா திசாவ) | இரண்டாவது அதிகாரம் |
|---|---|
| ஏழு கோறளை | நான்கு கோறளைகள் |
| ஊவா | மூன்று கோறளைகள் |
| மாத்தளை | சப்ரகமுவ |
| வலப்பனை | ஊவா பிரதேசம் |
| பிந்தென்ன | உடுநுவர, யட்டிநுவர |
| வெல்லஸ்ஸ | தும்பனே |
| நுவர கலாவிய | புலத்கம, கொத்மலை |
- பிரதானிகளின் கட்டளைகளை, செய்திகளை பிராந்திய அதிகாரிகளுக்குக் கொண்டு சென்றவர்கள் கடுபுள்ளே; வெள்ளிப் பூண் இடப்பட்ட, முனை வளைந்த பிரம்பு அவர்களின் அடையாளம்.
மாளிகை (மஹவாசல) அதிகாரிகள்
கஜநாயக்க நிலமே (யானைகள்), களஞ்சியப் பொறுப்பாளர், தியவடன நிலமே (புனித தந்ததாது), சலுவடன நிலமே (ஆடையணிகள்), பத்வடன நிலமே (உணவு), குதிரைலாய முகாந்திரம், கவியரங்கிற்கான முகாந்திரம்.
8.3 ரட்டவசம் எனும் பிரதேச நிர்வாகம்
- கண்டி இராச்சியம் ரட்ட, திசாவை என 21 பிரிவுகளால் ஆனது: கண்டி நகருக்கு அருகாமையில் ரட்ட (உடுநுவர, யடிநுவர, தும்பனை, ஹரிஸ்பத்துவ, தும்பர, ஹேவாஹெட்ட, கொத்மலை, உடபுலத்கம, பாதபுலத்கம), 12 திசாவைகள் (நான்கு கோறளை, மூன்று கோறளை, ஊவா, சப்ரகமுவ, மாத்தளை, வலப்பனை …).
- ரட்டைக்குப் பொறுப்பானவர்: ரட்டே ராலஅல்லது ரட்டே மஹத்தயா; அவர்களுக்குக் கீழ் லியனராள, உண்டிய ராள முதலிய சிறு அதிகாரிகள். திசாவைக்குப் பொறுப்பானவர் = திசாவை.
- திசாவைகள் கோறளைகளாகவும், கோறளைகள் பற்று என்றும் பிரிக்கப்பட்டன; கோறளைக்கு பொறுப்பான அதிகாரி = கோறளை (கோரள) ராள; ஒவ்வொரு குலத்தவருக்கும் முகாந்திரம்; ஒவ்வொரு கிராமத்தின் ஒழுங்குக்குப் பொறுப்பாக விதானைகள்.
வரி (பத்தே) வசூலிப்பு
- தொழில், குலம் அடிப்படையிலான தனியான அமைப்புகள்; இறுதிக் காலத்தில் திசாவையின் கீழ் செயற்பட்டது. ஐந்து பிரிவுகள்: மடிகே பத்த (போக்குவரத்து வரி), குருவே பத்த (யானை பிடித்தல் வரி), படஹெல பத்த (வனைதல் வரி), ரதா பத்த (சலவை வரி), ஹெந்த பத்த (நெசவு வரி).
விகாரைகள், தேவாலயங்களின் நிர்வாகம்
- மஹா நாயக்க, அனு நாயக்க – விகாரை நிர்வாகம்; தலதா மாளிகை – தியவடன நிலமே; கிராமத் தலைவர்கள் ராஜகாரிய முறையில் சேவைகள்.
நீதிமன்றச் செயற்பாடுகள்
- உயர் நீதி அதிகாரம் மன்னனுக்கே; மன்னனால் மட்டுமே தீர்ப்பு: முக்கிய தலைவர்கள் தொடர்பான வழக்கு; கிளர்ச்சி, குழப்பம்; சூழ்ச்சி; இராஜ துரோகம்; விகாரைகள், பிக்குகள் தொடர்பான வழக்குகள்.
- தண்டனைகள்: கன்னத்தில் அறைதல்; விலங்கிடுதல்; முழந்தாளிடச் செய்தல்; முடியைக் கத்தரித்தல்; தென்னை மட்டையால் அடித்தல்; துர்நாற்றத்தின் மத்தியில் வைத்தல்; கசையால் அடித்தல்; கீழ் குலத்தவராக்குதல்; நாடு கடத்துதல்; நீரில் மூழ்கடித்துக் கொல்லுதல்; யானையால் மிதித்துக் கொல்லுதல்.
பொருளாதார அமைப்பு
- விவசாயப் பொருளாதாரம்; நுகர்வை அடிப்படையாகக் கொண்டது; சுயதேவை; மலைப்பாங்கான நிலமானதால் நெற்செய்கை படிமுறை பள்ளத்தாக்குகள்; இராசரட்டை, உருகுணை ரட்டை பிரதேசங்கள் கண்டிக்கு உட்பட்டாலும் நீர்ப்பாசன அமைப்புகள் சீர்குலைந்தமையால் நெற்செய்கை வசதிகள் வரையறுக்கப்பட்டன.
- பயிர்கள்: குரக்கன், சோளம், தினை, சாமை, கிழங்கு; வீட்டுத் தோட்டம்: பலாக்காய், ஈரப்பலாக்காய், மிளகு, சாதிக்காய், கராம்பு, பாக்கு, மரக்கறி, பழவகை; சேனைப் பயிர்ச்செய்கை.
- இரும்பு உலோகம், மரம், அரக்கு, பன்புல் கைத்தொழில்கள்; மிருக வளர்ப்பு.
உரு 8.3 – பாய் இழைத்தல் (கண்டிக் காலக் கைத்தொழில்)
உரு 8.3 – கண்டி இராச்சியக் காலத்தில் பாய் இழைத்தல் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள விதத்தைக் காட்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொழிலாளர் குடும்பம் ஒன்று.
8.4 சமூக அமைப்பு
- நாட்டின் நிலம் அனைத்தும் அரசனுக்கே உரியது.
- நிலவகைகள் (உரிமையும் அனுபவித்தலும்):
| வகை | பயன் |
|---|---|
| கபடாகம் | அரச மாளிகையின் தேவைக்கு |
| நிந்தகம் | பிரதானிகளின் சேவைக்காக வழங்கப்பட்டவை |
| தேவாலயம் | தேவாலயங்களுக்குத் தானமளிக்கப்பட்டவை |
| விகாரகம் | விகாரைகளுக்குத் தானமளிக்கப்பட்டவை |
| பரவேணிகம் | கிராமத்தவர்கள் பரம்பரையாக அனுபவித்தவை |
- ராஜகாரியம் – நிலத்துக்காக ஏதாவது சேவையை அல்லது குறிப்பிட்ட பொருளை மன்னருக்கு வழங்குதல் (பொதுமக்களால் வழங்கப்படும் சேவை).
- கிராமிய சமூகம்; குலம் (கொய்கம, …) அடிப்படை; ஒவ்வொரு குலத்தவருக்கும் உரித்தான பொருளாதார நடவடிக்கைகள்; திருமணங்கள் தத்தம் குலத்தவரிடையே; தீக (தீக), பின்ன, ஒரே வீட்டில் உண்ணல் எனும் மூன்று வகைத் திருமணம்; குடும்பம் பிரதான சமூக அலகு; உழைப்புப் பரிமாற்றம் (அத்தம்); விகாரை கிராம வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சம்.
முக்கிய விடயங்கள் (பாடநூல் சுருக்கம்)
- கண்டி இலங்கையின் இறுதி இராச்சியம்; போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என மூவகை ஐரோப்பியருடன் செயற்பட நேர்ந்தது.
- எமது மன்னர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்கு பிரயத்தனப்பட்டனர்.
- பல்வேறு தொழில் குழுவினர் ஒருமைப்பாட்டுடன் செயற்பட்டனர்.
- கண்டி இராச்சியத்தை ஆண்ட மன்னர்களில் சிலர் தென்னிந்திய நாயக்க வம்சத்தைச் சேர்ந்தோர்.
- 1815 இல் ஆளுநர் றொபட் பிறௌன்றிக் உட்பட ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் கண்டிய சிங்களப் பிரதானிகள் சிலருக்கும் இடையே கைச்சாத்தான கண்டிய உடன்படிக்கை மூலம் கண்டி இராச்சியம் இங்கிலாந்து மன்னரிடம் கையளிக்கப்பட்டது – கண்டி இராச்சியத்தின் முடிவுக்கு முக்கிய காரணம்.
காலக்கோடு – அலகு 8
| ஆண்டு | நிகழ்வு |
|---|---|
| 1469 | சேனா சம்மத விக்கிரமபாகு – கண்டியின் முதல் மன்னன் |
| 1580 அளவில் | I ஆம் இராஜசிங்கன் கண்டியைக் கைப்பற்றல் |
| 1592 | I ஆம் விமலதர்மசூரிய |
| 1594 | தந்துரைப் போர் |
| 1630 | ரந்தெனிவெல போர் |
| 1635 | II ஆம் இராஜசிங்கன் |
| 1638 | கன்னொறுவ போர்; ஒல்லாந்துடன் உடன்படிக்கை |
| 1739 | நாயக்க வம்ச ஆட்சி ஆரம்பம் |
| 1753 | உபாலி தேரர் – உபசம்பதா (சியம் நிகாயம்) |
| 1796 | ஆங்கிலேயர் ஒல்லாந்த கரையோரத்தைக் கைப்பற்றல் |
| 1803 | ஆங்கிலேயர் கண்டியை ஆக்கிரமிப்பு (தோல்வி) |
| 1815 மார்ச் 2 | கண்டிய உடன்படிக்கை |
தேர்வு முக்கியத்துவம் – அலகு 8
- கண்டி இராச்சிய மன்னர்களில் இருவரின் முக்கியத்துவம் (செயற்பாடு 1): I ஆம் விமலதர்மசூரிய, II ஆம் இராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்.
- நிர்வாகக் கட்டமைப்பு (ரட்ட, திசாவை, கோறளை, பற்று).
- நிலவகைகள் (கபடாகம், நிந்தகம், தேவாலயம், விகாரகம், பரவேணிகம்).
- கண்டிய உடன்படிக்கை 1815.
- சமூக அமைப்புப் பற்றிய கடிதம் (செயற்பாடு 3).
