StudyBuddy
Chapters Subjects Ask a tutor Change medium

Have a doubt?

Ask our tutor on WhatsApp: +94 76 739 3761

Ask a tutor
StudyBuddy
O/L
ChaptersSubjectsAsk tutorMedium
Islam · Grade 10
2830

Grade 10 · Chapter 29

நடுநிலைமை பேணல்

6 min read · 15 quiz · 7 past-paper questions

OverviewNotesFlashcardsQuizPast papers

Have a doubt?

Ask our tutor on WhatsApp · +94 76 739 3761

Ask
100%

1. வஸதிய்யா (وسطية) என்றால் என்ன?

இரு தீவிரங்களுக்கிடையில் நடுநிலையான நிலையை ஏற்பது = வஸதிய்யா.

  • இஸ்லாம் எல்லா விவகாரங்களிலும் இந்த நடுநிலைப் போக்கையே விரும்புகிறது; கடைப்பிடிக்குமாறு ஏவுகிறது.

(2:143): "(விசுவாசிகளே!) அவ்வாறே (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சிகளாக இருங்கள். (நம்முடைய) தூதர் உங்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பார்."

  • முஸ்லிம் சமுதாயம் = "உம்மதன் வஸதன்" (أمة وسطا) – நடுநிலைச் சமுதாயம்.
  • எனவே சமூக, தனிமனித வாழ்வின் எல்லா விவகாரங்களும் நடுநிலையான போக்கைக் கொண்டிருக்க வேண்டும்.

வஸதிய்யாவுக்கு முரணானவை

  • உலகியல் விவகாரங்களில் மட்டும் தீவிரமாக ஈடுபடுவது.
  • ஆன்மீக விவகாரங்களில் மட்டும் தீவிரமாக ஈடுபடுவது.

2. வணக்கத்தில் நடுநிலை

(1) அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நிகழ்வு (புஹாரி)

  • நபி ﷺ: "நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாகக் கேள்விப்பட்டேன்." – "ஆம்."
  • நபி ﷺ: "அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்; நோன்பின்றியும் இருங்கள். (இரவில்) தொழுதும் வாருங்கள்; தூங்கவும் செய்யுங்கள். உங்கள் உடலுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களைச் சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன."
  • இதைக் கேட்ட இப்னு அம்ர் (ரழி) ஆன்மீகச் செயற்பாடுகளில் கையாண்ட கடும்போக்கைத் தளர்த்திக்கொண்டார்கள்.

(2) மூன்று ஸஹாபாக்களின் நிகழ்வு (புஹாரி)

நபி ﷺ அவர்களின் வாழ்வுமுறையைக் கேட்டறிந்த சில ஸஹாபாக்கள், தமது இபாதத்கள் போதாது என முடிவு செய்தனர்:

ஸஹாபிதீர்மானம்
முதலாமவர்"நான் இரவு முழுவதும் (தூங்காமல்) தொழுவேன்"
இரண்டாமவர்"நான் வருடம் முழுவதும் (தவறாமல்) நோன்பு நோற்பேன்"
மூன்றாமவர்"நான் மணமுடிக்கமாட்டேன்"

நபி ﷺ அவர்களின் பதில்:

"அல்லாஹ்வின் பெயரால், நான் உங்களைவிட அல்லாஹ்வை அதிகமாக அஞ்சுகிறேன், அடிபணிகிறேன். இருந்தும் நான் நோன்பு நோற்கிறேன்; நோன்பை விடவும் செய்கிறேன். (இரவில் தொழுகிறேன்; உறங்குகிறேன்). பெண்களை மணமுடித்தும் இருக்கிறேன். எனது ஸுன்னாவைப் பின்பற்றாதோர் என்னைச் சேர்ந்தவரல்லர்."

(3) முஆத் இப்னு ஜபல் (ரழி) நிகழ்வு (முஸ்லிம்)

  • முஆத் (ரழி) இமாமாகத் தொழுகை நடத்தியபோது, பக்தியின் காரணமாக நீண்ட ஸூறாவை ஓதினார்கள்.
  • பின்னால் நின்று தொழுத ஒருவர் பொறுமையிழந்து நபி ﷺ அவர்களிடம் முறையிட்டார்.
  • நபி ﷺ மூன்று முறை கடுமையாகக் கூறினார்கள்: "முஆதே! நீங்கள் மக்களைச் சோதனைக்குள்ளாக்குகிறீர்களா?"
  • அறிவுரை: "மக்களுக்கு இலகுவாக்கி வையுங்கள்; கஷ்டப்படுத்தாதீர்கள். ஆர்வமூட்டுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள்."

3. மார்க்கத்தில் மிதமிஞ்சிய தன்மை – எச்சரிக்கை

இப்னு அப்பாஸ் (ரழி) – ஜம்ராக் கற்கள்

  • ஹஜ்ஜின்போது முஸ்தலிபாவில் தங்கியிருந்த நபி ﷺ, மீகாத்களில் (ஜம்ராக்களில்) எறிவதற்காகக் கற்களைச் சேகரிக்க இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை அனுப்பினார்கள்.
  • பெரிய கற்களைப் பயன்படுத்துவதே சிறந்தது என மக்கள் ஆர்வம் கொண்டிருந்தபோது, இப்னு அப்பாஸ் (ரழி) சிறிய கற்களைப் பொறுக்கி வந்தார்கள்.
  • நபி ﷺ அவற்றை அங்கீகரித்து: "மார்க்கத்தில் மிதமிஞ்சிய தன்மை குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்" (அஹ்மத்).

"மிதமிஞ்சிய நுணுக்கத்துடன் செயல்பட்டோர் அழிவுக்குள்ளாகட்டும்"

  • நபி ﷺ இதை மூன்று முறை கூறி எச்சரித்தார்கள் (முஸ்லிம்).
  • இமாம் நவவி (ரஹ்): இவர்கள் வரம்பு மீறி மிதமிஞ்சிய தன்மையுடன் நடந்துகொள்வோர்.
  • நடுநிலை தவறுவோர் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைவர்.

பெருஞ் சுமைகள் (முஸ்னத் அஹ்மத்)

"பெருஞ் சுமைகளை உங்கள் மீது ஏற்றிக்கொள்ளாதீர்கள்; நீங்கள் அழிந்து போவீர்கள். உங்களுக்கு முன் சென்ற மக்கள் தம் மீது அதிக சுமைகளை ஏற்றிக்கொண்டார்கள்; இதனால் அழிந்து போனார்கள். அவர்களது எச்சங்கள் மடாலயங்களிலும் ஆசிரமங்களிலும் காணப்படுகின்றன."


4. உடலும் ஆன்மாவும் – சமநிலை

  • உடலைத் தந்த அல்லாஹ் ஆன்மாவையும் வழங்கியுள்ளான்.
  • உடலை வளர்த்து ஆன்மாவைப் புறக்கணிப்பதோ, ஆன்மாவை வளர்த்து உடலைப் புறக்கணிப்பதோ இஸ்லாம் அல்ல.
  • அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைப் போலவே அடியார்களுக்கும், சகோதர முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் செலுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

5. அன்றாட வாழ்வில் நடுநிலை

துறைசான்றுகருத்து
செலவு17:29கையைக் கழுத்தில் மாட்டிக்கொள்ளாதீர் (உலோபி ஆகாதீர்); முற்றிலும் விரித்தும் விடாதீர் (ஊதாரி ஆகாதீர்) – இல்லையெனில் நிந்திக்கப்பட்டவராகவும் துக்கப்பட்டவராகவும் ஆவீர்
உணவு, பானம்7:31உண்ணுங்கள், பருகுங்கள்; ஆனால் அளவு கடந்து விரயம் செய்யாதீர்கள்
நடை, பேச்சு31:19நடையில் மத்திய தரத்தைக் கடைப்பிடி; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்; கழுதையின் உரத்த சத்தமே மிக வெறுக்கத்தக்கது

31:19 – நடப்பதில் மிகத் தாமதமாகவோ மிக வேகமாகவோ நடப்பதைக் கண்டிக்கிறது.


6. இம்மை – மறுமை சமநிலை

(2:200–201):

  • "எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளை எல்லாம்) இம்மையிலேயே அளித்துவிடுவாயாக" என்று கோருபவர்களும் மனிதர்களில் உள்ளனர் – இவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.
  • "எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையளிப்பாயாக. (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக" என்று கோருபவர்களும் உள்ளனர்.

இம்மையின் நலனை மட்டும் கோருவது கண்டிக்கப்படுகிறது; இம்மை–மறுமை இரண்டினதும் நலன் கோருவது பாராட்டப்படுகிறது.


விரைவு மீட்டல்

  • வஸதிய்யா = இரு தீவிரங்களுக்கிடையிலான நடுநிலை; உம்மதன் வஸதன் (2:143).
  • அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) – "உடல், மனைவி, விருந்தினருக்கும் கடமைகள் உண்டு" (புஹாரி).
  • மூன்று ஸஹாபாக்கள் – "எனது ஸுன்னாவைப் பின்பற்றாதோர் என்னைச் சேர்ந்தவரல்லர்" (புஹாரி).
  • முஆத் (ரழி) – "மக்களைச் சோதனைக்குள்ளாக்குகிறீர்களா?" ×3; இலகுவாக்குங்கள் (முஸ்லிம்).
  • இப்னு அப்பாஸ் – சிறிய கற்கள்; மார்க்கத்தில் மிதமிஞ்சல் பற்றி எச்சரிக்கை (அஹ்மத்).
  • மிதமிஞ்சிய நுணுக்கத்தோர் அழியட்டும் ×3 (முஸ்லிம்) – இமாம் நவவி விளக்கம்.
  • செலவு 17:29; உணவு 7:31; நடை–பேச்சு 31:19; இம்மை–மறுமை 2:200–201.

Finished reading?

Next: test your memory with flashcards.

Go to flashcards →

Contents

1. வஸதிய்யா (وسطية) என்றால் என்ன? 2. வணக்கத்தில் நடுநிலை3. மார்க்கத்தில் மிதமிஞ்சிய தன்மை – எச்சரிக்கை 4. உடலும் ஆன்மாவும் – சமநிலை5. அன்றாட வாழ்வில் நடுநிலை6. இம்மை – மறுமை சமநிலை விரைவு மீட்டல்

0% read