நபி ﷺ அவர்களின் வபாத்துக்குப் பின் ஆட்சி செய்த நான்கு ஸஹாபாக்கள்.
அவர்களின் தனிப்பட்ட, குடும்ப, சமய, சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, கலாசார விவகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவையாகவும், அல்லாஹ்வினதும் தூதரினதும் வழிகாட்டலுக்கு அமைய நேர்மையாகவும், தன்னலமின்றியும் அமைந்திருந்தன.
அதனால் அவர்களை "நேர்வழி நடந்த கலீபாக்கள்" என நபி ﷺமுன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
வரிசை
கலீபா
1
அபூபக்கர் (ரழி)
2
உமர் (ரழி)
3
உஸ்மான் (ரழி)
4
அலி (ரழி)
2. அபூபக்கர் (ரழி) – வாழ்க்கைக் குறிப்பு
விடயம்
தகவல்
இயற்பெயர்
அப்துல்லாஹ் இப்னு அபீ குஹாபா
பிறப்பு
கி.பி. 573, மக்கா
ஜாஹிலிய்யாக் காலத்தில்
சிறந்த வர்த்தகர்; சமூகத்தில் மதிக்கப்படும் தலைவர்
நபியுடனான உறவு
நபியாகத் தெரிவு செய்யப்பட முன்னரே நட்புறவு
இஸ்லாத்தை ஏற்றமை
நபி ﷺ எடுத்துக் கூறியபோது எவ்விதத் தயக்கமுமின்றி; ஆண்களுள் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர்
கிலாபத்
ஹிஜ்ரி 11 இல் பொறுப்பேற்றார்; இரண்டு வருடங்களும் மூன்று மாதங்களும் ஆட்சி
வபாத்
ஹிஜ்ரி 13, தமது 63ஆவது வயதில்
அவரது மேன்மையைக் காட்டும் நிகழ்வுகள்
(1) உமர் (ரழி) உடனான முரண்பாடு
அபூபக்கர், உமர் (ரழி) இருவருக்கிடையே சிறிய முரண்பாடு; நபி ﷺ முகம் கோபத்தால் சிவந்தது.
அபூபக்கர் (ரழி) பயந்தவராக: "நபியே, நான்தான் அவருக்கு அநியாயம் செய்தேன்."
நபி ﷺ அங்கிருந்தவர்களிடம் (இருமுறை): "அல்லாஹ் என்னைத் தூதராக அனுப்பியபோது எல்லோரும் என்னைப் பொய்யன் என்றீர்கள்; ஆனால் அபூபக்கர் என்னை உண்மைப்படுத்தினார்; தமது ஆயுளையும் முழுச் சொத்து செல்வங்களையும் எனக்காக அர்ப்பணித்தார். அத்தகைய என் நண்பரை என்னிலிருந்து ஒதுக்கிப் பார்க்கிறீர்களா?"
அபூதர்தா (ரழி): இந்நிகழ்வின் பின்னர் யாருமே அவர் புண்படுமளவு நடந்துகொள்ளவில்லை.
(2) இஸ்லாத்தை ஏற்ற முதல் நாளிலேயே தஃவா
இஸ்லாத்தை ஏற்ற தினத்திலேயே மக்காவின் முக்கியஸ்தர்கள் சிலரை நபியிடம் அழைத்து வந்து இஸ்லாத்தில் இணைத்தார்கள்:
உஸ்மான், தல்ஹா, ஸுபைர், ஸஃதுப்னு அபீ வக்காஸ், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி).
(3) "ஸித்தீக்" பட்டம்
நபி ﷺமிஃராஜ் சென்ற செய்தியைக் கேள்வியுற்றதும் சிறிதளவேனும் தயக்கமின்றி அதை உண்மைப்படுத்தினார்கள்.
அதனாலேயே "ஸித்தீக்" (உண்மைப்படுத்தியவர்) எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.
3. ஆளுமைப் பண்புகள்
சந்தர்ப்பம்
வெளிப்பட்ட பண்பு
ஹிஜ்ரத்தின்போது நபிக்குத் துணை நின்றமை; நெருக்கடி நிறைந்த சூழலில் துணிவுடன் பக்கபலம்
துணிவு, விசுவாசம்
நபி ﷺ வபாத்தான செய்தியால் ஸஹாபாக்கள் நிலைகுலைந்தபோதுமிக நிதானமாகச் செயற்பட்டு மக்களை ஆறுதலடையச் செய்து சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தமை
நிதானம், தலைமைத்துவம்
கிலாபத்தின் சிக்கலான சூழலில் திடவுறுதியுடன் சாமர்த்தியமான முடிவுகள் மூலம் இஸ்லாத்தையும் இஸ்லாமிய அரசையும் பாதுகாத்தமை
திடவுறுதி, சாமர்த்தியம்
இஸ்லாத்தை ஏற்றது முதல் வபாத் வரை முழு வாழ்வையும் அதற்காக அர்ப்பணித்தார்கள்.
4. கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்ட முறை
நபி ﷺ உயிருடன் இருந்தபோது கலீபாத் தெரிவோ நியமனமோ நடைபெறவில்லை.
நபி ﷺ வபாத்தான தினம் அன்ஸாரிகள் "ஸகீபது பனீ ஸாஇதா" வில் ஒன்றுகூடி தலைவர் தெரிவு பற்றி ஆலோசித்தனர்.
இச்செய்தியறிந்த ஸஹாபாக்கள் சிலர் அங்கு சென்று கலந்துகொண்டனர்.
அதன்போது அபூபக்கர் (ரழி) அவர்களைக் கலீபாவாக ஏற்று, கூடியிருந்தோர் பைஅத் செய்தனர்.
அவர் தகுதியானவர் என்பதற்கான சான்றுகள்
சான்று
மூலம்
நபி ﷺ இறுதிக் காலத்தில் நோயால் எழுந்து நிற்கவும் முடியாதபோது, உமர் (ரழி) உட்படப் பல ஸஹாபாக்கள் இருந்தும், அபூபக்கர் (ரழி) அவர்களுக்கே தொழுகை நடத்தும்படி பணித்தார்கள்
—
இறுதி நாளில் அப்பாஸ் (ரழி), அலி (ரழி) தோள்களில் தாங்கியவாறு தொழுகைக்கு வந்தபோது, தொழுகை நடத்திக்கொண்டிருந்த அபூபக்கர் (ரழி) விட்டுக்கொடுத்து ஸப்பில் சேர முற்பட, நபி ﷺ அதைத் தடுத்து உட்கார்ந்து பின்தொடர்ந்து தொழுதார்கள்
புஹாரி
"எனக்குப் பின்னால் அடுத்தடுத்து வரும் அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் உங்களுக்கு வழிகாட்டிகளாக எடுத்துக்கொள்ளுங்கள்"
திர்மிதி
ஒரு பெண்மணி: "நான் வரும்போது நீங்கள் இல்லாது (மரணித்து) விட்டால்?" – நபி ﷺ: "நான் இல்லாவிட்டால் அபூபக்கர் அவர்களை வந்து சந்திக்கலாம்"
புஹாரி
5. பணிகளும் பங்களிப்புகளும் (7)
நபி ﷺ வபாத்தின் பின்னர் கிலாபத்தைப் பொறுப்பேற்று நல்லாட்சியைத் தொடர்ந்தமை.