(9:34): பொன்னையும் வெள்ளியையும் சேமித்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதோருக்கு நோவினை செய்யும் வேதனை.
(தபரானி): ஒரு கூட்டத்தார் ஸக்காத்தை வழங்காதிருந்தால் அல்லாஹ் அவர்களைப் பஞ்சத்தைக் கொண்டு சோதிப்பான்.
(ஹாகிம்): ஒரு கூட்டத்தார் ஸக்காத்தை வழங்காதிருந்தால் அல்லாஹ் அவர்களை விட்டும் மழையைத் தடுத்துவிடுவான்.
3. ஸக்காத்தினால் கிட்டும் பயன்கள் (8)
கொடுப்பவரின் உள்ளம் தூய்மையடைகிறது; பேராசையிலிருந்து விடுபடுகிறார்; "பணம்தான் எல்லாம்" என்ற இழி வாழ்விலிருந்து காப்பாற்றப்படுகிறார் → இரக்க சிந்தையோடு சமூகப் பணி.
ஏழையின் உள்ளமும் தூய்மையடைகிறது; பொறாமை, வெறுப்பு போன்ற மன நோய்களிலிருந்து விடுதலை → செல்வந்தர்களின் முன்னேற்றத்துக்காகப் பிரார்த்திப்பவராகிறார்.
இறைவனுக்கு நன்றி செலுத்தும் மனப்பாங்கு வளர்கிறது; அருட்கொடைகளைப் பாதுகாக்கும் வழி – (14:7): நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என்னருளை) அதிகமாக்குவேன்.
சமூகத்தில் பரஸ்பர அன்பு, கூட்டுப் பொறுப்பு, ஒற்றுமை வளர்கிறது.
பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு ஏற்படாதிருக்கிறது.
வறுமையால் ஏற்படும் திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைகின்றன → சமூகப் பாதுகாப்பு.
பொருளாதார விருத்தி – செல்வந்தர்கள் சொத்து குறையாமல் பாதுகாக்க பயனுள்ள வழிகளில் முதலீடு செய்வர்.
வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு – மூலதனம் இல்லாதோருக்கு மூலதனம்; தேவையானோருக்குத் தொழிற் பயிற்சி.
4. ஸக்காத் ஒரு கூட்டுக் கடமை
9:60 வசனம் ஸக்காத்தை வசூலிக்கும் பணியாளர்களையும் பெறுவோரில் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறது → தனிநபர்களிடமிருந்து திரட்டி உரியவர்களுக்கு வழங்குவது சமூகத்தின் பணி.
முஆத் (ரழி) அவர்களை யமனுக்கு அனுப்பியபோது நபி ﷺ: "அவர்களது செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு மீள வழங்கப்படும்" (புஹாரி).
நபி ﷺ அவர்களும் கலீபாக்களும் ஸக்காத்தைத் திரட்ட ஆள் அனுப்பினர்.
கூட்டாக நிறைவேற்றுவதன் பயன்கள்
செல்வந்தர்கள் யாரும் கடமையிலிருந்து நழுவ முடியாது.
ஏழைகளின் சுயமரியாதை பாதுகாக்கப்படுகிறது.
வறுமை ஒழிப்புக்காகப் பாரிய வேலைத்திட்டங்களைத் திட்டமிடலாம்.
கவனிக்கப்பட வேண்டிய அனைவரையும் கவனிக்கலாம்.
சமூக நலப் பணிகளிலும் கவனம் செலுத்தலாம்.
5. ஸக்காத் விதியாவதற்கான நிபந்தனைகள் (7)
முஸ்லிமாக இருத்தல்
சுதந்திரமானவராக இருத்தல்
பொருள் தனக்கு உரிமையாக இருத்தல் – பொதுச் சொத்துக்களுக்கு ஸக்காத் வாஜிபாகாது; ஆனால் பருவமடையாத சிறுவனின் அல்லது சுயபுத்தியற்றவனின் சொத்தைப் பராமரிப்பவர், அது தனக்கு உரிமையில்லாவிடினும் அதற்காக ஸக்காத் வழங்குவது கடமை.
நிஸாபை அடைந்திருத்தல் – ஸக்காத் விதியாவதற்குக் குறிக்கப்பட்ட ஆகக் குறைந்த அளவு = நிஸாப்; பொருட்களுக்கேற்ப வேறுபடும்.
வருடம் பூர்த்தியாகியிருத்தல் (ஹவ்ல்) – சந்திர வருடம்; பொருள் உடைமையானதிலிருந்து ஆரம்பம். தானியம், பழ வகை, புதையல் போன்றவற்றுக்கு வருடம் பூர்த்தியாக வேண்டியதில்லை – கைக்குக் கிடைத்தவுடன் கடமை.
சொத்து வளர்ச்சியடையக்கூடியதாக இருத்தல்
அடிப்படைத் தேவைகளை விட மேலதிகமாக இருத்தல்
ஸக்காத்தின் பர்ளுகள் (2)
நிய்யத் வைத்தல்
தகுதியானவர்களுக்கு வழங்குதல்
6. ஸக்காத் விதியாகும் பொருட்களும் நிஸாபும்
(1) கால்நடைகள் – ஆடு, மாடு, ஒட்டகம்
வண்டி இழுத்தல், உழுதல் போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு ஸக்காத் இல்லை.
கால்நடை
ஆரம்ப நிஸாப்
ஸக்காத்
ஆடு
40
40–120 → 1 பெண் ஆடு; 121–200 → 2; 201–399 → 3; 400–499 → 4; மேலும் ஒவ்வொரு 100க்கும் இரண்டு வயதுள்ள 1 பெண் ஆடு
மாடு
30
30 மாடுகளுக்கு ஒரு வயதுள்ள 1 காளை; 40 மாடுகளுக்கு இரண்டு வயதுள்ள 1 பசு; மேலும் 30, 40 இன் பெருக்கங்களுக்கு (தனியாகவோ கூட்டாகவோ)
ஒட்டகம்
05
5 ஒட்டகங்களுக்கு 1 ஆடு … 20 ஒட்டகங்களுக்கு 4 ஆடுகள்; 25 ஆனால் ஒரு வயதுள்ள ஒரு பெண் ஒட்டகம்
(2) தானியங்கள்
உற்பத்தி செய்யப்பட்டதாக, சேமித்து வைக்கக்கூடியதாக, பிரதான உணவுப் பொருளாக இருக்க வேண்டும் → நெல், கோதுமை போன்றவை.
நிஸாப் = 5 வஸக்குகள் ≈ 675 கி.கி.; உமியுடன் சேமிக்கப்படும் நெல்லாயின் இரு மடங்கு (1350 கி.கி.).
கவனிக்க:
அ) ஒரு வருடத்துக்குள் பல அறுவடை → ஒவ்வொரு தடவையும் ஸக்காத்; தனித்தனியே நிஸாபை அடையாவிட்டால் ஒன்றாகக் கூட்டி கணக்கிடப்படும்.
ஆ) வித்தியாசமான இரு தானியங்கள் ஒன்றாகக் கூட்டப்படமாட்டா (உ+ம்: கோதுமை + நெல்).
இ) ஒரே தானியத்தின் வேறுபட்ட இனங்கள் சேர்த்தே கணிக்கப்படும் (உ+ம்: நாட்டரிசி + சம்பா).
அ) ஓரினத்திலுள்ள எல்லா உருப்படிகளும் சேர்த்தே நிஸாப் (மாலை, வளையல், தங்க பிஸ்கட், அட்டியல், கிண்ணம்).
ஆ) பாவனையிலுள்ள நகைகளுக்கு ஸக்காத் இல்லை; மேலதிகமாகச் சேமித்து வைக்கப்பட்ட ஆபரணங்களுக்கு உண்டு.
இ) தங்க, வெள்ளிப் பாத்திரங்களுக்கு ஸக்காத் உண்டு.
ஈ) வேறு உலோகம் கலந்திருப்பின் அதைக் கழித்துவிட்டே நிஸாப்.
(5) பணம்
ஆரம்ப நிஸாப் = 85 கிராம் தங்கத்தின் பெறுமதி.
(வெள்ளியின் நிஸாபையே பணத்துக்குரியதாகக் கருத வேண்டும் என்ற நிலைப்பாடும் உண்டு.)
(6) வர்த்தகப் பொருட்கள்
பணத்துக்குரிய நிஸாபே இவற்றுக்கும்.
அ) வருட ஆரம்பத்தில் நிஸாபை அடையாதிருந்து இறுதியில் அடைந்திருந்தால் ஸக்காத் விதியாகும்.
ஆ) அன்றைய சந்தை விலையை வைத்தே நிஸாப் (கொள்வனவு விலையை விடக் கூடலாம், குறையலாம்).
7. ஸக்காத் பெறத் தகுதியானோர் – எட்டுப் பிரிவினர்
ஒருவர் ஸக்காத் கேட்டபோது நபி ﷺ: "ஸக்காத் விடயத்தில் ஒரு நபியோ வேறு யாருமோ முடிவெடுப்பதை அல்லாஹ் திருப்தியடையவில்லை; அவனே முடிவு செய்து எட்டுப் பகுதிகளாகப் பிரித்துள்ளான்" (அபூதாவூத்).
(9:60) வசனம் இதையே கூறுகிறது.
இல.
அறபு
பெயர்
விளக்கம்
1
الفقير
பகீர்
எவ்வித வருவாயும் அற்ற பரம ஏழை
2
المسكين
மிஸ்கீன்
தனக்கும் பராமரிப்பிலுள்ளவர்களுக்கும் போதுமான அளவு செலவு கிடைக்கப் பெறாதவர்
3
العامل
ஆமில்
ஸக்காத்தைக் கணக்கிடல், வசூலித்தல், விநியோகித்தல் பணியாளர்
4
مؤلفة القلوب
முஅல்லபதுல் குலூப்
இஸ்லாத்தின் பால் கவரப்பட்டவர்களும் கவரத் தக்கவர்களும்
5
الرقاب
அர்ரிகாப்
தவணை முறையில் உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை
6
الغارمون
காரிமூன்
நியாயமான காரணங்களுக்காகக் கடன்பட்டு அதைத் தீர்க்க வழியில்லாதவர்
7
في سبيل الله
பீ ஸபீலில்லாஹ்
அல்லாஹ்வின் பாதையில் இருப்போர்
8
ابن السبيل
இப்னு ஸபீல்
அனுமதிக்கப்பட்ட பயணம் மேற்கொண்டு அதை நிறைவு செய்ய வழியில்லாதவர் (வழிப்போக்கர்)
8. ஸக்காத் பெறத் தகுதியற்றோர் (5)
போதிய வருமானம் உள்ளவர்
அடிமைகள்
நபி ﷺ அவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் (பனூ ஹாஷிம், பனூ முத்தலிப்)
ஸக்காத் கொடுப்பவரால் தாபரிக்கக் கடமைப்பட்டவர்கள் (மனைவி, பிள்ளைகள், தாய் தந்தையர்)