பாடநூல் பக்கங்கள்: 142 – 172 | உப தலைப்புகள்: 8.1 முதலாம் உலக மகாயுத்தம் · 8.2 சர்வதேச சங்கம் · 8.3 இரண்டாம் உலக மகாயுத்தம் · 8.4 ஐக்கிய நாடுகள் சபை
8.0 அறிமுகம்
- 20 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் இரு மகாயுத்தங்கள்; ஐரோப்பாவில் ஆரம்பித்து ஏனைய கண்டங்களுக்கும் பரவின; பல நாடுகள் ஈடுபட்டதால் உலக மகாயுத்தங்கள். மீண்டும் உலக யுத்தத்தைத் தவிர்க்க சர்வதேச சங்கம், ஐக்கிய நாடுகள் சபை.
8.1 முதலாம் உலக மகாயுத்தம் (1914 – 1918)
- 1914 – 1918 – ஐரோப்பாவில் ஆரம்பித்து ஐரோப்பிய குடியேற்ற நாடுகளுக்கும், இறுதியில் ஐக்கிய அமெரிக்காவும் ஈடுபட்டதால் உலக யுத்தம்.
தேசப்படம் 8.1 – முதலாவது உலக மகாயுத்தம் உலகம் முழுவதும் பரவிய விதம் — ஊடாடும் தேசப்படத்தில் பயிற்சி செய்யுங்கள். தேசப்படம் 8.1 – முதலாவது உலக மகாயுத்தம் உலகம் முழுவதும் பரவிய விதம் (மத்திய ஐரோப்பிய வல்லரசு அணி: ஜேர்மனி, ஆஸ்திரியா–ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி; நட்பு நாடுகள் அணி: பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, சேர்பியா, ருமேனியா, கிரீஸ்).
முதலாம் உலக யுத்தத்துக்கான காரணங்கள்
1. ஜேர்மனியை ஐக்கியப்படுத்தியபோது பிரான்சும் ஜேர்மனியும் பகைமை நாடுகளானமை
- 19 ஆம் நூ. ஆரம்பத்தில் 350 சிறிய நாடுகள் (ஜேர்மன் மொழி). ஒட்டோவொன் பிஸ்மார்க் ஐக்கிய ஜேர்மனியை உருவாக்கினான்; 1870 – பிரான்சுடன் யுத்தம்; பிரான்ஸ் பெரும் தோல்வி; அல்சேஸ், லொரெயின் பிரதேசங்கள் ஜேர்மனிக்கு. அன்று முதல் இரு அயல் நாடுகளும் பரஸ்பர பகைமை.
2. ஜேர்மன் பேரரசன் இரண்டாம் வில்லியத்தின் செயற்பாடுகள்
- பிஸ்மார்க் குடியேற்றங்களில் அக்கறை காட்டவில்லை; 1887 இல் பேரரசனான இரண்டாம் வில்லியம் ஜேர்மனிக்குக் குடியேற்றங்கள், கடற்படை, இராணுவம் பலப்படுத்தல் → பிரித்தானியா பதிலாகப் படைகளைப் பலப்படுத்தியது.
உரு 8.1 – ஒட்டோவொன் பிஸ்மார்க்
உரு 8.1 – ஒட்டோவொன் பிஸ்மார்க்.
உரு 8.2 – இரண்டாம் வில்லியம்
உரு 8.2 – இரண்டாம் வில்லியம்.
3. குடியேற்றங்கள் குறித்த போட்டி – ஆசியா, ஆபிரிக்காவில் குடியேற்றம் அமைக்கும் போட்டி; பிரித்தானியா அதிக குடியேற்றம்; ஜேர்மனி கைத்தொழில் வளர்ச்சியால் சந்தை தேடல் → அச்சம்.
4. ஆயுதப் போட்டிகளும் தேசியவாதமும் – ஐரோப்பிய வல்லரசுகளின் ஆயுதப் போட்டி; இத்தாலி, ஜேர்மனி ஐக்கியம்; தேசியவாத எழுச்சி.
5. பிஸ்மார்க் பின்பற்றிய வெளிநாட்டுக் கொள்கை – பிரான்சைத் தனிமைப்படுத்தல் → இரு முகாம்கள்:
| மத்திய ஐரோப்பிய (வல்லரசு) அணி | நட்பு (நேச) நாடுகள் அணி |
|---|---|
| ஜேர்மனி, ஆஸ்திரியா–ஹங்கேரி, இத்தாலி (ஆரம்பத்தில்), துருக்கி, பல்கேரியா | பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா (பின்) , இத்தாலி (பின் மாறியது) |
6. ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசனின் கொலை – சரஜீவோ நிகழ்வு (உடனடிக் காரணம்)
- ஆஸ்திரியாவின் இளவரசன் பிரான்சிஸ் பேர்டினன்ட்டும் மனைவியும் பொஸ்னியத் தலைநகர் சரஜீவோ வில் சுற்றுலாவின்போது சேர்பியர்களால் கொலை (1914 ஜூன்).
- ஆஸ்திரியா நிபந்தனைகள் முன்வைத்தது; சேர்பியா நிராகரிப்பு → 1914 ஜூலை 28 – ஆஸ்திரியா சேர்பியாவுக்கு எதிராக யுத்தப் பிரகடனம்.
உரு 8.3 – பிரான்சிஸ் பேர்டினன்ட் கொலை
உரு 8.3 – பிரான்சிஸ் பேர்டினன்ட்டும் அவர் மனைவியும் கொல்லப்படுவதைச் சித்திரிக்கும் ஓவியமும் அவர்கள் பயணம் செய்த வாகனமும்.
யுத்தத்தின் பரவல்
- ஆஸ்திரியா சேர்பியாவைத் தாக்க → ரஷ்யா சேர்பியாவுக்கு உதவ; 1914 ஆகஸ்ட் 1 – ஜேர்மனி ரஷ்யாவுக்கு எதிராக; பின் பிரான்சுக்கு எதிராக; பெல்ஜியம் வழியாகத் தாக்குதல் → பிரித்தானியா ஜேர்மனிக்கு எதிராக யுத்தம் (குடியேற்ற நாடுகளையும் இணைத்து).
- தரை, கடல் போர்; புதிய ஆயுதங்கள்; நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்.
ஐக்கிய அமெரிக்காவின் ஈடுபாடு
- ஆரம்பத்தில் நடுநிலை; லூசிடானியா பயணிகள் கப்பல் ஜேர்மன் நீர்மூழ்கியால் மூழ்கடிக்கப்பட்டமை (அமெரிக்கர் பலர் இறப்பு) → அமெரிக்கா யுத்தத்தில் (நேச நாடுகள் அணி); உணவு, கடற்படை, 2 மில்லியன் படை; ஜேர்மனி தோல்விக்கு முக்கிய காரணம்.
- இத்தாலி இரகசிய ஒப்பந்தத்தால் நேச நாடுகள் பக்கம் இணைந்தது.
உரு 8.5 – லூசிடானியாக் கப்பல்
உரு 8.5 – லூசிடானியாக் கப்பல்.
யுத்தத்தின் முடிவு
- நேச நாடுகளின் தாக்குதலால் ஜேர்மன் படை ஒடுங்கியது; உணவு நெருக்கடி, கிளர்ச்சி; ஜேர்மனியின் கடற்படையினர் கிளர்ச்சி; பேரரசன் சிம்மாசனத்தைக் கைவிட்டான் → 1918 ஜேர்மனி தோல்வி.
விளைவுகள்
- மத்திய ஐரோப்பிய அணி தோல்வி; நட்பு நாடுகள் வெற்றி.
- பெருந்தொகை உயிரிழப்பு, சொத்து அழிவு; லட்சக்கணக்கானோர் ஊனம்.
- வேர்சேல்ஸ் உடன்படிக்கை (1919 ஜனவரி பாரிஸ் அமைதி மாநாடு). தலைவர்கள்: வூட்றோ வில்சன் (ஐ. அமெரிக்கா), லொயிட் ஜோர்ஜ் (பிரித்தானியா), க்ளெமன் ஷோ (பிரான்ஸ்), விட்டோரியோ ஒர்லாண்டோ (இத்தாலி).
வேர்சேல்ஸ் உடன்படிக்கையில் ஜேர்மனிக்கு விதிக்கப்பட்ட கடுந்தண்டனைகள்:
- வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெருந்தொகை நட்டஈடு.
- இராணுவத்தை வைத்துக்கொள்ளல்; போர்த் தளபாடம் தயாரித்தல் மீது வரையறை.
- அல்சேஸ், லொரெயின் பிரான்சுக்கு மீள.
- ஐரோப்பாவுக்கு வெளியே ஜேர்மன் குடியேற்றங்கள் வெற்றி பெற்றோரிடையே பகிர்வு.
- ஐரோப்பாவில் சர்வாதிகார முடியாட்சிகள் வீழ்ச்சி – ஜேர்மன் பேரரசு, ஆஸ்திரிய–ஹங்கேரிப் பேரரசு, துருக்கிப் பேரரசு; புதிய சுதந்திர அரசுகள் – பின்லாந்து, போலந்து, செக்கோஸ்லோவேக்கியா.
- ஐரோப்பா பொருளாதார ரீதியாக வீழ்ச்சி; ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா உலக வல்லரசுகள்.
- எதிர்காலத்தில் இத்தகைய பேரழிவிலிருந்து காக்க "நாடுகளின் அமையம்" (சர்வதேச சங்கம்).
8.2 சர்வதேச சங்கம் (League of Nations)
- 1919 பாரிஸ் சமாதான மாநாடு; ஐ. அமெரிக்க ஜனாதிபதி வூட்றோ வில்சன் முன்முயற்சி; 1920 ஜனவரி 10 – உருவானது; ஆரம்பத்தில் 42 நாடுகள்.
நோக்கங்கள்
- நாடுகளிடையே கருத்து வேறுபாடுகளைச் சமாதானமாகத் தீர்த்தல்.
- எதிர்காலத்தில் உலக யுத்தம் ஒன்று ஏற்படுவதைத் தவிர்த்தல்.
- சர்வதேசப் புரிந்துணர்வு, ஒத்துழைப்பு.
- சிறிய நாடுகளின் சுதந்திரம், சுயாதீனத்தைப் பாதுகாத்தல்.
- மனித குல ஒற்றுமை மூலம் உலக சமாதானம்.
வெற்றிகள்
- சுவீடன் – பின்லாந்து; ஜேர்மனி – போலந்து; கிரேக்கம் – பல்கேரியா; ஈரான் – துருக்கி ஆகிய நாடுகளிடையே யுத்த முரண்பாடுகளைத் தவிர்த்தமை.
- அகதிகள் புனர்வாழ்வு.
- முதலாம் உலக யுத்தத்தின் பின் குடியேற்ற நாடுகள் பற்றிய மேற்பார்வை.
- சட்டவிரோத அடிமை வியாபாரம், போதைப்பொருள் வர்த்தகம் ஒழிப்பு.
தோல்விக்கான காரணங்கள்
- ஐக்கிய அமெரிக்கா சங்கத்தில் இடம்பெறாமை (அமெரிக்க செனட் சபை விரும்பவில்லை); ரஷ்யா விலக்கப்பட்டமை.
- தீர்மானங்களை நிறைவேற்ற இராணுவம் இல்லை; நாடுகளை நிர்ப்பந்தித்துச் செயற்படுத்த முடியாமை.
- பலம் வாய்ந்த நாடுகளிடையே ஒற்றுமையின்மை; சுயநலம்.
- இத்தாலி அபிசீனியாவை ஆக்கிரமித்தபோது பொருளாதாரத் தடை பயனளிக்கவில்லை; ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்கிரமித்தபோது நடவடிக்கை இல்லை.
- விளைவு: இரண்டாம் உலக மகாயுத்தம்.
8.3 இரண்டாம் உலக மகாயுத்தம் (1939 செப்டம்பர் – 1945 ஆகஸ்ட்)
- 6 ஆண்டுகள்; முதலாம் உலக யுத்தம் முடிந்த இரு தசாப்தங்களில் மீண்டும்.
இரண்டாம் உலக யுத்தத்துக்கான காரணங்கள்
1. ஜேர்மனியில் ஹிட்லரின் எழுச்சி
- முதலாம் உலக யுத்தத்தின் பின் வைமார் குடியரசு (வைமார் அரசு) – பலவீனம்; வேர்சேல்ஸ் நட்டஈடு; பணவீக்கம்; 1929 உலகப் பொருளாதார நெருக்கடி – வேலையின்மை; ஹிட்லரின் ஆதரவாளர் சாதகமாகக் கொண்டனர்.
- அடோல்ப் ஹிட்லர் – ஆஸ்திரியர்; முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்காகப் போரிட்டவர்; சிறையில் "மெயின் காம்ப்" (எனது போராட்டம்) நூல்; 1933 – ஜேர்மனியின் சான்சலர்; கட்சி தேசிய சோசலிசக் கட்சி (நாசி).
- நாசிசவாதம்: ஜனநாயகம், சமவுடைமை, முதலாளித்துவத்துக்கு எதிரானது; ஜேர்மன் இனம் (ஆரியர்) உலகின் உன்னத இனம்; யூதர்களைப் புறக்கணிப்பு; சர்வாதிகார அரசியல்.
- ஹிட்லர் படிப்படியாக அதிகாரத்தை உறுதிப்படுத்தினார்: ஹின்டன்பேர்க் மறைவுக்குப் பின் ஜனாதிபதி அதிகாரங்களும்; பாராளுமன்றக் கட்டடத்துக்கு (ரீஷ்டாக்) தீ வைத்துக் கம்யூனிஸ்டுகள்மீது குற்றம்; அரசியல் கட்சிகள் தடை; எஸ். எஸ். இராணுவம், கெஸ்டாபோ இரகசியப் பொலிஸ்; கொபெல்ஸ் – பிரசார அமைச்சர்.
- 1934 – சர்வதேச சங்கத்திலிருந்து விலகல்; 1938 – ஆஸ்திரியா ஆக்கிரமிப்பு; செக்கோஸ்லோவாக்கியா (சுடேட்டன்லாந்து); 1939 செப்டம்பர் 1 – போலந்து ஆக்கிரமிப்பு.
- யூத இனப் படுகொலை (ஹொலகோஸ்ட்): வதை முகாம்கள் – அவுஷ்விட்ஸ், பர்கன் பெல்ஷன், பெல்ஷெக், சொபிபோர்; இலட்சக்கணக்கான யூதர்கள், ரஷ்யர்கள் கொலை.
உரு 8.6 – அடோல்ப் ஹிட்லர்
உரு 8.6 – அடோல்ப் ஹிட்லர்.
உரு 8.7 – நாசி முகாம்களில் கொல்லப்பட்டோரின் மோதிரங்களும் காலணிகளும்
உரு 8.7 – நாசி முகாம்களில் கொலை செய்யப்பட்டோரின் மோதிரங்களும் காலணிகளும்.
2. இத்தாலியில் முசோலினியின் செயற்பாடுகள்
- முதலாம் உலக யுத்தத்தில் வெற்றி பெற்ற அணியிலிருந்தும் இத்தாலிக்கு நன்மை இல்லை; வேலையின்மை, உணவுத் தட்டுப்பாடு; பெனிடோ முசோலினி – 1922 – பாசிசவாத அரசியல் கட்சி; கருஞ்சட்டை இராணுவம்; சர்வாதிகார ஆட்சி.
- 1936 – அபிசீனியா (எத்தியோப்பியா) ஆக்கிரமிப்பு; ஹிட்லருடன் இணைந்து இரண்டாம் உலக யுத்தத்தில்; இறுதிக் கட்டத்தில் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டான்.
உரு 8.9 – பெனிடோ முசோலினி
உரு 8.9 – பெனிடோ முசோலினி.
3. ஜப்பானின் நடவடிக்கைகள்
- 19 ஆம் நூ. பிற்பகுதி முதல் முன்னேற்றம்; சந்தை, மூலப்பொருள் தேவை; ஐரோப்பியருடன் மோதல்; 1934 – வட சீனாவில் மஞ்சூரியா ஆக்கிரமிப்பு; சர்வதேச சங்கத்திலிருந்து விலகல்; சீன நகரங்கள் ஆக்கிரமிப்பு.
4. சர்வதேச சங்கத்தின் பலவீனம் – யுத்தத்தைத் தடுக்கும் அதிகாரம் இல்லை; நாடுகள் நட்பு உடன்படிக்கைகள்; ஆயுதமயமாக்கல்.
இரண்டாம் உலக யுத்த அணிகள்
| நேச நாடுகள் (Allies) | அச்சு நாடுகள் (Axis) |
|---|---|
| ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சோவியத் ரஷ்யா (கம்யூனிச) | ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் |
- 1937 – ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் இரகசிய ஒப்பந்தம்; தலைநகரப் பெயர்கள் – பேர்லின், ரோம், டோக்கியோ அச்சு.
தேசப்படம் – இரண்டாம் உலக யுத்த அணிகள் — ஊடாடும் தேசப்படத்தில் பயிற்சி செய்யுங்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கு கொண்ட அணியினர் (நேச நாடுகள்: ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா; அச்சு நாடுகள்: ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான்).
யுத்தத்தின் ஆரம்பமும் பரவலும்
- 1939 செப்டம்பர் 1 – ஹிட்லர் போலந்தை ஆக்கிரமிப்பு → பிரித்தானியாவும் பிரான்சும் ஜேர்மனிக்கு எதிராக யுத்தப் பிரகடனம். ஜேர்மனி 4 வாரங்களில் போலந்தைத் தோற்கடித்தது.
- 1940 – டென்மார்க், நோர்வே, ஒல்லாந்து, பெல்ஜியம்; ஜூன் 1940 – பிரான்ஸ் (பாரிஸ்) கைப்பற்றல்; முசோலினி பிரான்சின் பகுதியை ஆக்கிரமித்தான்; பிரான்ஸ் ஜேர்மன் கீழ்.
- பிரித்தானியா: பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில்; 1940 செப்டம்பர் 14 – கொடிய வான்போர் (பிரித்தானிய விமானப்படை ஜேர்மனியின் 56 விமானங்களைச் சுட்டு வீழ்த்தியது); ஹிட்லர் பிரித்தானியத் தாக்குதல் முயற்சியை நிறுத்தினான்.
- பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆபிரிக்கா, இந்தியா, இலங்கை போன்ற பேரரசு நாடுகளின் உதவி; ஐ. அமெரிக்கா உதவி.
உரு 8.13 – வின்ஸ்டன் சேர்ச்சில்
உரு 8.13 – வின்ஸ்டன் சேர்ச்சில்.
ஐக்கிய அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபடல்
- 1941 நவம்பர் 7 (டிசம்பர் 7) – ஜப்பான் பேர்ள் துறைமுகத்தை (Pearl Harbour) விமானத் தாக்குதல் → அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் ஜப்பானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம்; ஜேர்மனி, இத்தாலி அமெரிக்காவுக்கு எதிராக → ஐரோப்பிய யுத்தம் உலக மகாயுத்தமாகியது.
உரு 8.14 – பேர்ள் துறைமுகத் தாக்குதல்
உரு 8.14 – பேர்ள் துறைமுகத்தைத் தாக்குதல்.
ஜேர்மனி ரஷ்யாவை ஆக்கிரமித்தல் (1941)
- ஹிட்லர் எவ்வித காரணமுமின்றி ரஷ்யா மீது படையெடுப்பு; நெப்போலியன் தோல்வி போன்ற கடும் குளிர்காலம்; ரஷ்யா தந்திரோபாயமாகப் பின்வாங்கி ஜேர்மன் படைகளை உள்ளிழுத்தது; குளிர், உணவுத் தட்டுப்பாடு, நோய் → ஜேர்மன் படை பெருந்தோல்வி.
ஜேர்மனி அடிபணிதல்: ரஷ்யப் படை முன்னேறல்; பிரான்ஸ், அமெரிக்கப் படை மேற்கில் தாக்குதல்; 1945 மே – பேர்லின் நகருக்குள் நேச நாடுகள்; ஹிட்லர் உட்பட தளபதிகள் தற்கொலை; 1945 மே ஜேர்மனி சரண்.
ஜப்பான் சரணடைதல்: ஜப்பான் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, ஹொங்கொங் உட்பட ஆசியா (இலங்கை, இந்தியா தவிர); 1942 ஏப்ரல் 5 – கொழும்பு, ஏப்ரல் 7 – திருகோணமலை மீது குண்டுவீச்சு.
- 1945 ஆகஸ்ட் 6 – ஹிரோசிமா, ஆகஸ்ட் 9 – நாகசாகி மீது அணுகுண்டு (ஐ. அமெரிக்கா); ஒரு இலட்சத்துக்கும் மேல் இறப்பு; ஜப்பான் பேரரசன் ஹிரோஹிடோ 1945 ஆகஸ்ட் 14 சரணடைவு → இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவு.
உரு 8.15 – அணுகுண்டு
உரு 8.15 – ஹிரோசிமா மீது போடப்பட்ட அணுகுண்டும் புகைமண்டலமும்.
உரு 8.16 – ஹிரோசிமா பேரழிவு
உரு 8.16 – ஹிரோசிமா பேரழிவு.
இரண்டாம் உலக யுத்தத்தின் விளைவுகள்
- ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் (அச்சு நாடுகள்) தோல்வி.
- சுமார் 50 மில்லியன் உயிர்கள்; சொத்து அழிவு கணக்கிட முடியாது.
- யூதர் படுகொலை – மில்லியன் கணக்கில் வதை முகாம்களில்.
- அணுகுண்டுப் பேரழிவு; பரம்பரைகளையும் பாதித்தது.
- பிரித்தானியா, பிரான்ஸ் வல்லரசுத் தகுதி இழப்பு → இலங்கை, இந்தியா, இந்தோனேசியா உட்பட குடியேற்ற நாடுகள் சுதந்திரம்.
- மார்ஷல் திட்டம் – ஐ. அமெரிக்கா ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்பியது.
- ஐ. அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் வல்லரசுகள் – முதலாளித்துவ முகாம் (அமெரிக்கா) × சமவுடைமை முகாம் (சோவியத்) → பனிப்போர் (Cold War) – இரகசிய உளவுச் சேவை, அமைப்புகள், உதவித் திட்டங்கள்.
- ஆசிய, ஆபிரிக்க நாடுகள் சுயாதீன நாடுகளாக; 1961 – அணிசேரா (கூட்டுச் சேரா) நாடுகளின் மகாநாடு – ஜவகர்லால் நேரு வழிகாட்டி; மார்ஷல் டிட்டோ (யூகோஸ்லேவியா), அப்துல் கமால் நாசர் (எகிப்து).
உரு 8.17 – ஹிட்லர் படையால் அழிக்கப்பட்ட கிராமக் குழந்தைகள் நினைவுச் சின்னம்
உரு 8.17 – ஹிட்லரின் படையினால் அழித்தொழிக்கப்பட்ட கிராமமொன்றில் இறந்துபோன பிள்ளைகளை ஞாபகமூட்டுவதற்கான நினைவுச் சின்னம்.
8.4 ஐக்கிய நாடுகள் சபை (UN)
- யுத்தத்தின்போதே பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சிலும் ஐ. அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் அத்திலாந்திக் சாசனம் (1941 ஆகஸ்ட்) கைச்சாத்து.
- 1942 ஜனவரி – வாஷிங்டனில் அச்சு நாடுகளுக்கு எதிராகச் சண்டையிட்ட 26 நாடுகள் – "ஐக்கிய நாடுகள்" என்ற சொல் முதன்முதலாக.
- 1943 ஒக்டோபர் – மொஸ்கோ மாநாடு (ரஷ்யா, பிரித்தானியா, ஐ. அமெரிக்கா, சீனா வெளிவிவகார அமைச்சர்கள்); 1943 டிசம்பர் – டெஹ்ரான் – ரூஸ்வெல்ட், சேர்ச்சில், ஜோசப் ஸ்டாலின்.
- 1945 ஜூன் – சான் பிரான்சிஸ்கோ – 50 நாடுகளின் பிரதிநிதிகள்; போலந்து பின்னர் கையொப்பம் → ஆரம்ப அங்கத்தவர் 51.
- 1945 ஒக்டோபர் 24 – பிரகடனம் உத்தியோகபூர்வ ஏற்பு → ஐக்கிய நாடுகள் சபை உதயம்; ஒக்டோபர் 24 – ஐக்கிய நாடுகள் தினம்.
உரு 8.18 – ஐ.நா. தலைமைக் கட்டடம் (நியூயோர்க்)
உரு 8.18 – நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகக் கட்டடம்.
உரு 8.19 – ஐ.நா. சின்னம்
உரு 8.19 – ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ சின்னம்.
நோக்கங்கள்
- சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் நிலைநிறுத்தல்.
- நாடுகளிடையே நட்புறவை வளர்த்தல்.
- மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரத்தை உறுதிசெய்து சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்தல்.
கட்டமைப்பு – ஆறு பிரதான நிறுவகங்கள்
- பொதுச் சபை 2. பாதுகாப்புச் சபை 3. சமூக பொருளாதார சபை 4. நம்பிக்கை பொறுப்புச் சபை 5. சர்வதேச நீதிமன்றம் 6. செயலகம்
| நிறுவனம் | அங்கத்தவர் / தலைமையகம் | பிரதான பணிகள் |
|---|---|---|
| பொதுச் சபை | 193 நாடுகள்; ஒவ்வொரு செப்டம்பரிலும் கூடும்; ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு வாக்கு | சமாதானம், பாதுகாப்புப் பிரச்சினைகள் விவாதம்; வரவு செலவுத் திட்டம் அனுமதி; பாதுகாப்புச் சபையின் சிபாரிசின்படி செயலாளர் நாயகம் தெரிவு, நீதிபதிகள் நியமனம், புதிய அங்கத்தவர் சேர்ப்பு |
| பாதுகாப்புச் சபை | 15 நாடுகள்: 5 நிரந்தர உறுப்பு நாடுகள் (ஐ. அமெரிக்கா, சோவியத் ரஷ்யா/ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா) + 10 நாடுகள் (2 ஆண்டு) | சர்வதேச சமாதானத்துக்கு அச்சுறுத்தல்கள் ஆராய்தல்; வீட்டோ (Veto) – நிரந்தர உறுப்பினர் இரத்துச் செய்யும் அதிகாரம்; பொருளாதாரத் தடை, படை நடவடிக்கை |
| சமூக பொருளாதார சபை (ECOSOC) | 54 உறுப்பினர்; 3 ஆண்டு | பொருளாதார, சமூக, கலாசார, கல்வி, சுகாதார அபிவிருத்தி; இணை நிறுவனங்கள்: ILO, FAO, UNESCO, IMF, WHO, UNICEF |
| நம்பிக்கைப் பொறுப்புச் சபை | — | நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் வரப்பட்ட பிரதேசங்களை நிர்வகித்தல் (ஆரம்பத்தில் 11 நாடுகள்; 1994 இல் அனைத்தும் சுதந்திரம்; 2005 இல் அகற்றத் தீர்மானம்) |
| சர்வதேச நீதிமன்றம் | ஹேக் (நெதர்லாந்து) | சட்ட ஆலோசனை; நாடுகளிடையே சிக்கல்களுக்குச் சட்டரீதியான தீர்வு |
| செயலகம் | நியூயோர்க்; செயலாளர் நாயகம் (5 ஆண்டு) | தலைமை நிருவாக அலுவலகம்; பாதுகாப்புச் சபைக்குப் பிரச்சினைகளை முன்வைத்தல் |
உரு 8.20 – ஐ.நா. பொதுச் சபை மண்டபம்
உரு 8.20 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூடும் மண்டபம்.
உரு 8.23 – ஹேக் நகரில் சர்வதேச நீதிமன்றக் கட்டடம்
உரு 8.23 – ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றக் கட்டடம்.
ஐ.நா. சபை உலக சமாதானத்தைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகள்
- ஐக்கிய நாடுகள் அணுவாயுத ஆணைக்குழு (அணு ஆயுதக் கட்டுப்பாடு).
- பனிப்போர் (கெடுபிடி யுத்தம்): பல சந்தர்ப்பங்களில் ஐ.நா. தலையிட்டுத் தீர்வு.
- சுயஸ் கால்வாய் நெருக்கடி: எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நாசர் சுயஸ் கால்வாயைத் தேசியமயம்; இஸ்ரேல், பிரித்தானியா, பிரான்சியப் படை; ஐ.நா. தலையீடு.
- வளைகுடா நெருக்கடி: ஈராக் குவைட்டை ஆக்கிரமித்தது (எண்ணெய் படிவுகள்); ஐ.நா. தலைமையில் தீர்வு.
- கியூபாவின் ஏவுகணை நெருக்கடி: ரஷ்யா கியூபாவில் ஏவுகணைகள் பொருத்தல்; அமெரிக்கா கடல் முற்றுகை; செயலாளர் நாயகம் தலையீட்டால் தீர்வு.
- பொருளாதாரத் தடை; அணு ஆயுதங்களைக் குறைத்து, கட்டுப்படுத்தல் (வட கொரியா, ஈரான்); சமாதானப் படை.
ஒப்பீட்டு அட்டவணை – இரு உலக மகாயுத்தங்கள்
| அம்சம் | முதலாம் உலக யுத்தம் | இரண்டாம் உலக யுத்தம் |
|---|---|---|
| காலம் | 1914 – 1918 | 1939 செப். – 1945 ஆகஸ்ட் |
| உடனடிக் காரணம் | சரஜீவோ கொலை (பிரான்சிஸ் பேர்டினன்ட்); ஆஸ்திரியா–சேர்பியா யுத்தம் 1914 ஜூலை 28 | ஜேர்மனி போலந்தை ஆக்கிரமிப்பு (1939 செப். 1) |
| பிரதான காரணிகள் | பிஸ்மார்க், இரண்டாம் வில்லியம்; குடியேற்றப் போட்டி; ஆயுதப் போட்டி; இரு முகாம்கள் | ஹிட்லர் (நாசி), முசோலினி (பாசிசம்), ஜப்பான்; வேர்சேல்ஸ்; சர்வதேச சங்கத் தோல்வி |
| அணிகள் | மத்திய ஐரோப்பிய அணி × நட்பு நாடுகள் | அச்சு நாடுகள் × நேச நாடுகள் |
| ஐ. அமெரிக்கா சேர்ந்தது | லூசிடானியா மூழ்கடிப்பு | பேர்ள் துறைமுகத் தாக்குதல் (1941) |
| முடிவு | ஜேர்மனி தோல்வி; வேர்சேல்ஸ் உடன்படிக்கை | ஹிரோசிமா, நாகசாகி; ஜப்பான் சரண் (ஆகஸ்ட் 14, 1945) |
| அமைப்பு | சர்வதேச சங்கம் (1920) | ஐக்கிய நாடுகள் சபை (1945) |
முக்கிய விடயங்கள்
- முதலாம் உலக யுத்தம்: பிஸ்மார்க் கொள்கை, இரு முகாம்கள், சரஜீவோ கொலை (1914).
- வேர்சேல்ஸ் உடன்படிக்கை ஜேர்மனிக்குக் கடுந்தண்டனை; சர்வதேச சங்கம் (1920).
- இரண்டாம் உலக யுத்தம்: ஹிட்லர், முசோலினி, ஜப்பான்; சர்வதேச சங்கத் தோல்வி.
- யுத்தத்தின் பின் வல்லரசுகள் (அமெரிக்கா, சோவியத்); பனிப்போர்; குடியேற்ற நாடுகள் சுதந்திரம்; ஐக்கிய நாடுகள் சபை.
காலக்கோடு – அலகு 8
| ஆண்டு | நிகழ்வு |
|---|---|
| 1870 | ஜேர்மனி–பிரான்ஸ் யுத்தம்; அல்சேஸ் லொரெயின் |
| 1887 | இரண்டாம் வில்லியம் பேரரசனானார் |
| 1914 ஜூன் | சரஜீவோ கொலை |
| 1914 ஜூலை 28 | ஆஸ்திரியா–சேர்பியா யுத்தப் பிரகடனம் |
| 1914 ஆகஸ்ட் 1 | ஜேர்மனி–ரஷ்யா யுத்தம் |
| 1918 | முதலாம் உலக யுத்த முடிவு |
| 1919 ஜனவரி | பாரிஸ் அமைதி மாநாடு; வேர்சேல்ஸ் |
| 1920 ஜனவரி 10 | சர்வதேச சங்கம் |
| 1922 | முசோலினி – பாசிசம் |
| 1929 | உலகப் பொருளாதார நெருக்கடி |
| 1933 | ஹிட்லர் சான்சலர் |
| 1934 / 1936 | ஜப்பான் மஞ்சூரியா / இத்தாலி அபிசீனியா |
| 1938 | ஹிட்லர் ஆஸ்திரியா, செக்கோஸ்லோவாக்கியா |
| 1939 செப்டம்பர் 1 | போலந்து ஆக்கிரமிப்பு – இரண்டாம் உலக யுத்தம் |
| 1940 ஜூன் | பிரான்ஸ் வீழ்ச்சி |
| 1941 | ரஷ்யா மீது படையெடுப்பு; பேர்ள் துறைமுகம் |
| 1942 ஏப். 5/7 | கொழும்பு/திருகோணமலை குண்டுவீச்சு |
| 1945 மே | ஜேர்மனி சரண் |
| 1945 ஆகஸ்ட் 6, 9, 14 | ஹிரோசிமா, நாகசாகி; ஜப்பான் சரண் |
| 1945 ஒக்டோபர் 24 | ஐக்கிய நாடுகள் சபை |
| 1961 | அணிசேரா நாடுகளின் மாநாடு |
தேர்வு முக்கியத்துவம் – அலகு 8
- முதலாம் உலக யுத்த காரணங்கள் (மூன்று), விளைவுகள்; வேர்சேல்ஸ் நிபந்தனைகள்.
- சர்வதேச சங்கம் – நோக்கம், வெற்றி, தோல்வி.
- இரண்டாம் உலக யுத்தம் – ஹிட்லர், முசோலினி, ஜப்பான்; நாசிசவாதம்.
- ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புகளும் பணிகளும்; வீட்டோ.
- தேசப்படம் 8.1 – மத்திய ஐரோப்பிய × நட்பு நாடுகள் (செயற்பாடு 1).
- அட்டவணை – காரணங்கள் × விளைவுகள் (செயற்பாடு).
